Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னோட சாபம் உங்கள சும்மா விடாது.. சீமானை விடாமல் அடிக்கும் விஜயலட்சுமி! மறுபடியும் வெளியிட்ட வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பெரியாரிய உணர்வாளர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சீமானை விமர்சித்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி அதில் இந்த ஜென்மத்தில் சீமான் ஜெயிக்க மாட்டார் என்னோட சாபம் அவரை ஜெயிக்க விடாது என கடுமையாக பேசியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து பேசியது தமிழகத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெரியாருக்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் என்ன சம்பந்தம் என பேசி, அவர் சில கருத்துக்களை கூறியிருந்த நிலையில் பெரியார் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

seeman periyar actress vijayalakshmi

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்," அம்பேத்கரையும், பெரியாரையும் ஒப்பிடுவது ஓர் முரண். இருவரின் சிந்தனையும் ஒன்றா? இருவருக்கும் சிலை வைத்தால் ஒன்றாகி விடுமா? அம்பேத்கர் உலகின் தலைசிறந்த கல்வியாளர் என சீமான் பேசியிருந்தார்.

மேலும் சில கருத்துக்களை கூறியிருந்த நிலையில் பெரியார் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தொடர்ந்து சீமான் வீட்டை முற்றுகையிடச் சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சீமானுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. சீமானுக்கு திமுக எம்பி கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழக தலைவர் கி வீரமணி உள்ளிட்ட பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தப்பட்டது. இதற்கிடையே ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் பெரியார் குறித்து சீமான் பேசி வருவது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் சீமானுக்கு எதிராக போராட்டம் வெடித்திருக்கும் நிலையில் அவரைக் கண்டித்து போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் சீமானுக்கு எதிராக புகாரும் காவல்துறையில் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நிலையில் சீமானை விமர்சித்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி அதில் இந்த ஜென்மத்தில் சீமான் ஜெயிக்க மாட்டார் என்னோட சாபம் அவரை ஜெயிக்க விடாது என கடுமையாக பேசியுள்ளார்.

அந்த வீடியோவில் பேசியுள்ள அவர்," மிஸ்டர் சீமான் பெரியார் யார் என்று உங்களுக்கு தெரியாதா? அப்படியா? பெரியார் யார் அவர் தமிழ்நாட்டுக்கு என்னவெல்லாம் செய்தார் என பெரியாரிஸ்டுகள் வந்து சொல்லுவாங்க.. பெரியாரிஸ்டுகள் வந்து உங்களுக்கு சொல்லுவாங்க..

தாய் தந்தையை குறிப்பிட்டு பேசியிருக்கிறீர்கள்? நீங்கள் உண்மையிலேயே ஒரு தாய் தந்தைக்கு பிறந்திருந்தால் நீங்க சொல்லுங்க.. திராவிட மாடல் திருட்டு மாடலா? இப்போ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அந்த மைக்கை வச்சு பேசுங்க.. நீங்க தான் எனக்கு மாசம் மாசம் பணம் கொடுத்தீங்க.. ஆனா, என்னயவே தப்பா பேசுனீங்க..

கண்டிப்பா ஒரு நாள் நான் ஜெயிப்பேனு நீங்க சொல்லிக்கிட்டே இருக்கீங்க.. அப்ப உங்கள எல்லாம் உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்னு சொல்றீங்க.. கிடையவே கிடையாது.. இந்த ஜென்மத்துல நீங்க ஜெயிக்க மாட்டீங்க.. என்னோட சாபம் உங்கள ஜெயிக்க விடாது. இப்ப கூட நினைச்சுகிட்டு இருக்கீங்களா? தொண்டை வத்த வத்தக் கற்றினாலும் ஜெயிச்சிருவோம் என்று நினைத்தீர்களா? ஒன்றுமே கிடையாது" என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+