ஆர்எஸ்எஸ் மாதிரி செயல்படுது திமுக.. வேலூர் சிறையில் மசூதியை மட்டும் திறக்காதது ஏன்? சீமான் ஆவேசம்
சென்னை: வேலூர் மத்திய சிறை வளாகத்தில் மூடப்பட்டு உள்ள பள்ளிவாசலை இஸ்லாமிய சிறைவாசிகள் வழிபட உடனடியாகத் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது, "வேலூர் மத்திய சிறைச்சாலையின் வளாகத்திற்குள் அனைத்து மத சிறைவாசிகள் தத்தம் மத நம்பிக்கையின்படி வழிபடுவதற்கு ஏதுவாக இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த வழிபாட்டுத் தலங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த நிலையில், அவை அனைத்தும் கொரோனா காலத்தில் தனி மனித இடைவெளியைப் பேணும் பொருட்டு மூடப்பட்டன.

ஆனால், கொரோனா காலத் தடைகளுக்குப் பிறகு இந்து மற்றும் கிறிஸ்துவ வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டு அம்மதங்களைச் சேர்ந்த சிறைவாசிகள் மீண்டும் வழிபட அனுமதிக்கப்படும் நிலையில், இசுலாமியர்களின் வழிபாட்டுத்தலமான பள்ளிவாசல் மட்டும் இன்றளவும் திறக்க அனுமதிக்காமல் மூடப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. இதர மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இசுலாமிய வழிபாட்டுத் தலத்தை மட்டும் திமுக அரசு ஏன் திறக்க அனுமதிக்கவில்லை?
இது குறித்து பலமுறை புகாரளித்தும் பள்ளிவாசல் திறக்கப்படாததால் வேலூர் சிறை வளாகத்திற்குள் தொழுகை நடத்த முடியாமல் இசுலாமியச் சகோதரர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இதற்குப் பெயர்தான் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கச் செய்யும் திமுகவின் திராவிட மாடல் அரசா? இசுலாமிய சிறை வாசிகளை மட்டும் தொடர்ச்சியாக திமுக அரசு மதவாத மனப்பான்மையுடன் அணுகி துன்புறுத்துவது ஏன்? நீண்ட கால இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையைத்தான் திமுக அரசு சாத்தியப்படுத்தவில்லை.
அவர்களாக முயன்ற பிணை மனுவிற்கும் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து, தள்ளுபடி செய்ய வைத்துவிட்டது. தற்போது அவர்களின் குறைந்தபட்ச அடிப்படை உரிமையான வழிபாட்டு உரிமையைக்கூட தர மறுத்து ஆர்எஸ்எஸ், பாஜக போல திமுக அரசும் செயல்படுவது கொடுங்கோன்மையின் உச்சமாகும். இதுதான் இசுலாமியர்களை திமுக அரசு பாதுகாக்கும் லட்சணமா? ஆகவே, திமுக அரசு உடனடியாக இசுலாமிய சிறைவாசிகளின் மிக நியாயமான கோரிக்கையான வேலூர் மத்திய சிறை வளாகத்தில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை உடனடியாகத் திறந்து அவர்கள் மீண்டும் வழிபடும் உரிமையை வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications