அதிமுகவை விட்டு விளாசிய சீமான்.. நாம் தமிழர் கூட்டணிக்கு சான்ஸே இல்லை போல! பாஜக கனவிற்கு பெரிய செக்?
சென்னை: அதிமுகவை மீண்டும் கடுமையாக விமர்சனம் செய்யும் ரூட்டை எடுத்துள்ளார் நாம் தமிழர் சீமான். உயிரிழந்த நீட் தேர்வு மாணவர்களுக்கு அதிமுக செலுத்திய அஞ்சலி ஒரு நாடகம் அதிமுகவின் போராட்டம் என்று நாம் தமிழர் சீமான் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் கண்ணீர் அஞ்சலி போராட்டம் நாடகம். அதிமுகவின் கண்ணீர் அஞ்சலி போராட்டத்துக்கு நான் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன் தேர்தல் வரும்போது இது போன்ற நாடகங்களை பார்த்துதான் ஆக வேண்டும், என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கூட்டணி வேண்டாம்
இந்த நிலையில்தான் எங்கே சீமான் அதிமுக - பாஜக கூட்டணிக்கு வராமல் டிமிக்கி கொடுக்க நினைக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியில் சீமானை இழுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறதாம். பாஜகவின் ஒரு லாபி இதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறதாம்.
சீமான் கூட்டணிக்கு வர வேண்டும் என்றால் துணை முதல்வர் பதவியை எதிர்பார்ப்பார். அதோடு இத்தனை காலம் திராவிட கட்சிகள், தேசிய கட்சிகளை எதிர்த்த அரசியல் எல்லாம் வீணாக போகும். அதோடு மாற்று அரசியல் என்று பேச முடியாத நிலை ஏற்படும். அதிமுக - பாஜகவோடு கூட்டணி வைத்தால்..நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் பெரும்பாலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்லும் நிலை ஏற்படும். இத்தனை காலம் சீமான் கட்டி எழுப்பிய கோட்டை உடையும். இதனால் சீமான் அதிமுக - பாஜக கூட்டணிக்கு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுக போராட்டத்தை சீமான் விமர்சனம் செய்யவும் இதுவே காரணம் என்று கூறப்படுகிறது.
பாஜக பிளான் என்ன?
அதிமுக கூட்டணியில் இந்த முறை பாஜக கிட்டத்தட்ட 100+ இடங்களை பெற திட்டமிட்டு உள்ளதாம். ஆம்.. அதாவது 100+ இடங்களை பெற்றுவிட்டு அதில் சிலவற்றை தனது கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம். அதாவது அதிமுக சில இடங்களை கூட்டணி கட்சிக்கு கொடுத்தால்.. பாஜகவும் கூடுதல் இடங்களை வாங்கி அதை டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறதாம்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய உதாரணங்கள் உள்ளன என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.
சீமான் வந்தால் என்ன ஆகும்?
இந்த நிலையில் சீமான் ஒருவேளை பாஜக கூட்டணிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
சீமானிடம் கணிசமான வாக்குகள் உள்ளன. நாம் தமிழர் கட்சிக்கு 8% சதவிகிதம் வரை வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகள் கணிசமாக என்டிஏ கூட்டணிக்கு செல்லும். பொதுவாக சீமானுக்கு வாக்களிப்பவர்கள்.. அதிமுக, திமுகவிற்கு மாற்று என்று கருதுபவர்கள் . அதோடு தேசிய கட்சிகளை விரும்பாத தமிழ் தேசியம் பேசக்கூடியவர்கள். இதனால் இவர்கள் அப்படியே பாஜக கூட்டணிக்கு செல்வது சரியாக இருக்காது. அதற்கு வாய்ப்பும் இல்லை. இதனால் 8 சதவிகிதம் அப்படியே பாஜக கூட்டணிக்கு செல்லாது . அதே சமயம் நாம் தமிழர் கட்சி திமுக, அதிமுக இரண்டையும் எதிர்த்தாலும் கூட.. அதிமுக மீது ஒரு சாப்ட் கார்னர் உள்ளது. இதனால் என்டிஏ கூட்டணி இது ஒருவகையில் சாதகம்தான்.
பாஜக பிளான்
அதிமுக கூட்டணியிலேயே உள் கூட்டணி கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் எடப்பாடியிடம் தினகரன், ஓ பன்னீர்செல்வத்தை சேருங்கள் என்ற கோரிக்கையை பாஜக வைக்க வேண்டியது இருக்காது. தேமுதிக, பாமக, புதிய தமிழகம் தொடங்கி இன்னும் சில உதிரி கட்சிகள் என்று பெரிய கூட்டணி லிஸ்ட் அமித் ஷா கையில் உள்ளதாம். இந்த லிஸ்டில் நாம் தமிழர் பெயரும் உள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இவர்களுடன் நாம் கூட்டணியை உறுதி செய்ய வேண்டும். அதற்கான பணிகளை நாங்கள் செய்கிறோம். இவர்கள் யாருடனும் மோதல் மட்டும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அமித் ஷா கூறி உள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications