இந்த முறையும் சீமான் புதுமை.. 234-ல் 117 தொகுதிகள் பெண்களுக்கு.. விரைவில் வேட்பாளர்கள் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சி சார்பில் இந்த சட்டசபை தேர்தலில் 117 பெண்கள் களமிறங்குகிறார்கள் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தங்களுடைய செல்வாக்கை தெரிந்து கொள்ள அனைத்து கட்சியினரும் தயார்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

இந்த தேர்தலில் ரஜினியும் களம் காணப்படுவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் உடல்நிலை பாதிப்பால் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்துவிட்டார்.

தேர்தல் பிரச்சாரம்

தேர்தல் பிரச்சாரம்

தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளான அதிமுகவும் திமுகவும் தங்கள் பாணியில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒரு புறம் தனக்கே உரிதான பாணியில் தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகிறார்.

சீமான்

சீமான்

இவர் செய்யும் பிரச்சாரத்தில் தமிழக அரசை கடுமையாக சாடி இந்த திட்டம் ஏன் முடிக்கலை அந்த திட்டம் ஏன் அப்படி கிடக்கு என்று கேட்கிறார். மீதமுள்ள தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் மற்றவர்கள் முதுகில் சவாரி செய்யக் கூடிய கட்சிகளாகும். தனித்து போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார்.

ஆணுக்கு பெண்

ஆணுக்கு பெண்

இவர் எப்போதுமே வேட்பாளர் தேர்தலில் ஆணுக்கு பெண் சமம் என்பதை உணர்த்தும் வகையில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் 50 சதவீத இடங்களை நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு ஒதுக்கி வருகிறார். அது போல் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 117 பெண் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுகிறார்கள்.

117 தொகுதிகளில் ஆண்கள்

117 தொகுதிகளில் ஆண்கள்

மீதம் உள்ள 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்கள் களம் காண்பார்கள். சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் 60 சதவீதம் அளவுக்கு நிறைவுபெற்று விட்டன.

சீமான்

சீமான்

மீதமுள்ள பணிகளும் இன்னும் சில நாட்களில் முடிவடைந்து இறுதி வடிவம் பெற்றுவிடும் என்று கூறினார். இதனை தொடர்ந்து இந்த மாத இறுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்கள், பட்டியலை சீமான் அறிவிக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+