Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனைவி கயல்விழியுடன் கைகோர்த்தபடியே ஆஜரான சீமான்! தொண்டர்களுக்கு செம ரியாக்ஷன்! 2 மணிநேர விசாரணை ஓவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்தது.

நடிகை விஜயலட்சுமி, சீமானுடன் வாழ்த்துகள் எனும் படத்தில் நடித்த போது காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு அவர் கயல்விழி என்ற வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு தன்னை ஏமாற்றியதாகவும் பலமுறை விஜயலட்சுமி புகாராக தெரிவித்துள்ளார்.

 Seeman is going to appear before Valasaravakkam police station

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். சீமானை ஜெயிலுக்கு அனுப்பாமல் நான் சென்னையை விட்டு கிளம்ப மாட்டேன் என கூறியிருந்தார். இதன் எதிரொலியாக நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சீமான் மீது பொய் புகார் அளித்ததாக கூறி விஜயலட்சுமியை நாம் தமிழர் கட்சியினர் ஆபாசமாக விமர்சித்திருந்தனர். மேலும் சீமானிடம் விஜயலட்சுமி புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் ஒரு கேவலம் என்றும் வேங்கைவயல் விவகாரம் போல் என் மீது கழிவ ஏன் கரைக்குறீங்க என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார்.

சீமான் பேசும் ஒவ்வொரு பதிலடிக்கும் நடிகை விஜயலட்சுமி ஒருமையிலும் ஆபாசமாகவும் பதில் அளித்திருந்தார். இந்த நிலையில் அவர் வீடியோவில் கூறுகையில் கடந்த 2009ஆம் ஆண்டு ஈழத் தமிழர்கள் போரில் இறந்து கொண்டிருந்த போது சீமான் என்னுடன்தான் இருந்தார் என விஜயலட்சுமி கூறியிருந்தார். இந்த நிலையில் சீமானிடம் விசாரணை நடத்த இரு முறை வளசரவாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் அவர் செப்டம்பர் 18ஆம் தேதி ஆஜராவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அதற்குள் திடீர் டிவிஸ்ட்டாக நேற்று முன் தினம் நள்ளிரவில் சீமான் மீது கொடுத்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் வாங்கிக் கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சீமானும் விஜயலட்சுமியும் சமாதானம் ஆனதாக கூறப்படும் நிலையில் வீரலட்சுமியும் சீமானும் , வீரலட்சுமியும் விஜயலட்சுமியும் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டனர்

 Seeman is going to appear before Valasaravakkam police station

சீமான் என்னதான் இருந்தாலும் அவர் என்னுடைய எதிரி அல்ல, அவர் என் கணவர், அவருடன் சில காலம் வாழ்ந்துள்ளேன். அவரை நான் கணவனாகத்தான் நினைக்கிறேன், நான் அவருடன் பேசிவிட்டேன். தற்போது புகாரை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். நான் சீமானிடம் காசு வாங்கவில்லை என்றார். விஜயலட்சுமி தனது புகாரை வாபஸ் பெற்றுவிட்ட நிலையில் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவாரா என்ற சந்தேகம் இருந்தது.

ஆனால் காவல் துறையினரோ சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றார். இதனிடையே வீரலட்சுமி தன்னை அவதூறாக பேசி வருவதால் அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் என விஜயலட்சுமி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று தனது வழக்கறிஞர் சங்கருடன் சீமான் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவருடைய மனைவி கயல்விழியுடன் (அவரும் வழக்கறிஞர்) சீமான் ஆஜரானார். காவல் நிலையத்திற்குள் சென்ற போது தொண்டர்களுக்கு தம்ப்ஸ் அப் காட்டினார். இந்த நிலையில் அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தார்.

 Seeman is going to appear before Valasaravakkam police station

முன்னதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தை சுற்றி போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை சுற்றியுள்ள தெருக்களில் தடுப்பு வைத்து போலீஸார் தடுத்தனர். காவல் நிலையத்தை சுற்றியுள்ள தெருக்களில் 300 போலீஸார் 3 அடுக்கு பாதுகாப்பில் இருந்தனர். சீமானுடன் வழக்கறிஞர் சேர்த்து 5 பேர் மட்டுமே காவல் நிலையத்திற்குள் அனுமதி என குறிப்பிடப்பட்டுள்ளது. சீமானை பார்க்க வந்த நாம் தமிழர் கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் அங்கு தள்ளுமுள்ளு, வாக்குவாதம் நடந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+