சீமான் விவகாரம்: நீ வாயை மூடுறா முதல்ல,உன்னை எவ கூப்பிட்டா? போடா..பிரஸ் மீட்டில் வெடித்த விஜயலட்சுமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை போலீசில் புகார் கொடுத்த நடிகை விஜயலட்சுமி செய்தியாளர்கள் சந்திப்பின் போது திடீரென ஆவேசமடைந்து, நீ வாயை மூடுறா முதல்ல.. உன்னை எவ கூப்பிட்டா? போடா என வெடித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் தமக்கு 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது; ஆனால் சீமான் தம்மை ஏற்க மறுத்து துரோகம் செய்து வருகிறார் என்பது நடிகை விஜயலட்சுமியின் குற்றச்சாட்டு. இந்த புகாரை நீண்டகாலமாக சொல்லி வந்த நடிகை விஜயலட்சுமி கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

Seeman issue: Actress Vijayalakshmi loses Control in Press meet

இதனிடையே சீமானுடன் தாம் சமரசமாகிவிட்டதாகவும் மாமா சீமானுடன் சிலர் மோதலை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் எனவும் நடிகை விஜயலட்சுமி பல்டி அடித்தும் வீடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து சென்னை வந்த நடிகை விஜயலட்சுமி, சென்னை போலீசில் சீமான் மீது புகார் கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை விஜயலட்சுமி கண்ணீரும் கதறலுமாக, சீமானை சிறைக்கு அனுப்புவேன். சீமானுக்கு எதிராக எப்படி எல்லாம் போராட்டம் நடத்த வேண்டும் என தெரியும். சீமான் மீது உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்பதற்காக போலீசில் புகார் கொடுத்தேன் என்றார். அப்போது தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமியும் உடன் இருந்தார்.

Seeman issue: Actress Vijayalakshmi loses Control in Press meet

இப்பேட்டியின் போது திடீரென விஜயலட்சுமி, செய்தியாளர்களிடம் கோபமடைந்து பாதியிலேயே கிளம்பினார். அவரது வழக்கறிஞர்கள் விஜயலட்சுமியை மீண்டும் அழைத்து வந்து செய்தியாளர்களிடம் பேச வைத்தனர்.

அப்போது, என்னுடைய தாய் இலங்கை தமிழர். தலைவர் பிரபாகரனின் கொடியை தன்னுடைய கொடியாக வைத்து கொண்டு ஏமாற்றி வருகிறார் சீமான். அவருடன் நான் படுத்தேன், வாழ்ந்தேன் என்பதற்கு எல்லாம் ஆதாரம் கேட்டு துன்பப்படுத்தாதீர்கள். நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு ஆதரவாக இருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+