பலாத்கார புகார் சொன்ன நடிகை ஒரு பாலியல் தொழிலாளி.. ஆதாரம் இருக்கு- சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு
சென்னை: நடிகை ஒரு பாலியல் தொழிலாளி; அதற்கான ஆதாரங்களை தாம் காட்டுவேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், என் மீது பலாத்கார புகார் தெரிவித்த நடிகை பாலியல் தொழிலாளி.. அவ பாலியல் தொழிலாளி என்பதற்கான ஆதாரங்களை நான் காட்டவா? 15 ஆண்டுகள் நான் கண்ணியமாக இருந்த போது நீங்கள் எல்லாம் என்ன ** செய்தீர்கள்? அவ தான் பொண்ணா.. அவளுக்குதான் மனசு இருக்கா? எங்கள் வீட்டில் பெண்கள் இல்லை? எங்களுக்கு நீதி இல்லையா?

என் மனைவிக்கு வலி இல்லையா?
என்னைப் பெற்ற தாய் இல்லையா? என் உடன்பிறந்த அக்கா தங்கை இல்லையா? என்னை நேசிக்கிற உலகம் முழுவதும் வாழ்கிற சொந்தங்கள் எனக்கு இல்லையா? என்னை உயிராக நேசித்து வாழுகிற என் மனைவி பெண் இல்லையா? அவளுக்கு எல்லாம் மனசு இல்லை.. காயம் இல்லை?
உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு?
ஒரு சமூகத்தை நேசிக்கிற மகனை இப்படி தினமும் முச்சந்தியில் நிற்க வைத்து அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு எல்லாம் என்ன தகுதி இருக்கிறது? இந்த நாட்டை என்னடா புண்ணியவானும் கண்ணியவானுமா ஆண்டுகிட்டு இருக்கீங்களா? என்னை கேள்வி கேட்க உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு?
நீ யார் என்னை பாலியல் குற்றவாளி என சொல்ல?
நான் நடிகை குறித்து கேள்வி கேட்டதில் கண்ணியம் குறைந்துவிட்டது எனில் நீங்கள் செய்கிற செயலுக்கு என்ன பெயர்? நீ எப்படி என்னை பாலியல் குற்றவாளி என முடிவு செய்கிற? விசாரணைதானே நடக்கு.. நீ எப்படி என்னை பாலியல் குற்றவாளி என முடிவு செய்த? உன்னை அப்படி யார் பேச சொன்னது?
கேரளா தீர்ப்பு என்ன?
நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தது நான்..வழக்கு நடந்து கொன்டிருக்கிறது ..அதற்குள் என்னை பாலியல் குற்றவாளி என சொல்ல நீ யார்? நீ யார்? எப்படி சொல்லுவ? ஒரு பெண் சொல்வதுதான் உண்மை என எப்படி நம்புவீங்க? என்பதுதான் கேரளாவில் நேற்று வந்த தீர்ப்பு.

நானும் உங்க மேல பழி சொல்லவா?
நானும் உங்க மேல பழிசொல்லவா? ஆயிரம் பேர் என்மீது பழி சொல்லலாம் தம்பி.. விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது நீங்க எப்படி என்னை பாலியல் குற்றவாளி என சொல்லலாம்? விசாரணையின் முடிவில்தான் அனைத்தும் தெரியனும்.. அதற்குள் ஏன் என் மீது குற்றச்சாட்டை வைக்கிற? உன் நோக்கம் என்ன? நீ என்ன தகுதி, அருகதை பற்றி பேசுகிற? நீங்க முதலில் தலைமைப் பண்புடன் நடந்து கொள்ளுங்க..அம்மையார் கனிமொழி, அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை- பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு வாய் திறந்தாங்களா? ஶ்ரீமதி சாவில் உங்கள் கருத்து என்ன?
திராவிட பன்னிகள்.. உண்ணிகள்
ஏனெனில் அங்கே யாரும் இல்லை... இங்கே சீமான் இருக்கிறான்.. என்னை பார்த்து நீங்க நடுங்குகிறீங்க.. திராவிடப் பன்னிகளின் ரத்தத்தை உறிஞ்சுகிற உண்ணிகளான காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்ட்டுக்கும் என்ன தகுதி இருக்கிறது? மும்மொழிக் கொள்கையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் நிலைப்பாடு என்ன? புதிய கல்விக் கொள்கையில் உங்க நிலைப்பாடு என்ன? கருத்து என்ன? காவிரி, கச்சத்தீவு, முல்லைப் பெரியாறு பிரச்சனையில் உங்கள் நிலைப்பாடு என்ன? நீ கம்யூனிஸ்ட்டே இல்லை.. உனக்கு தர்க்கம் என்ன? நீங்கள் எல்லாம் கார்ப்பரேட் முதலாளிகளாகிவிட்டீர்கள்? இவ்வாறு சீமான் கேள்வி எழுப்பினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications