Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீமான் கைதாகிறாரா?.. "நரிக்குறவர் வந்தேறிகள்".. இதோ வந்தாச்சு பஞ்சாயத்து.. அதிரடியாக வந்த அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சாதி தொடர்பான சர்ச்சைகளில் சமீபகாலங்களில் சிக்கி வரும் நிலையில், அடுத்த பிரச்சனை வெடித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சீமானின் பிரச்சாரம் வெகுவாக கவனிக்கப்பட்டது.. வழக்கமாக சாதி அரசியலை கையில் எடுக்காத சீமான், இந்த இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு முதல் அனைத்து வியூகங்களிலும் மிகுந்த கவனம் செலுத்தியிருந்தார்.
திமுக மீதான எதிர்ப்பை அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தினாலும், தன்னுடைய இடைத்தேர்தல் பிரச்சாரங்களில், முதலியார் ஜாதி வாக்குகளை குறிவைத்தும் பேசினார்.

Seeman narikuravar community welfare board member condemns and warns naam tamilar party seeman

முதல் + யார்: "முதலியார் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? மானத்தமிழ் மக்கள்தான் முதலியார்.. அந்த வரலாறு உங்களுக்கு தெரியுமா? சேர சோழ பாண்டிய மன்னர்கள் காலத்தில் பட்டாடை நெய்து கொடுத்தவர்கள் முதலியார் ஜாதியினர். அத்துடன் போர் என்றால் முதலில் செவ்வேள் ஏந்தி களத்துக்கு வந்தவர்கள். அதனால்தான் அவர்கள் முதலியார் என அழைக்கப்பட்டனர். இந்த வரலாறு தெரியுமா? அத்துடன் இந்த நிலத்தில் என் ஆதித்தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அதைப்போல விஜயநகரப் பேரரசு ஆட்சியிலும் நீங்கள் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்று சொன்னபோது, போடா வேற ஆளை பாரு! என்றார்கள்.

வந்தேறிகள் : வேறு வழியில்லாமல் அங்கிருந்த ஆதி குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள்" என்று சீமான் பேசியிருந்தார்... அதாவது, அருந்ததியர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து குடியேற்றப்பட்ட வந்தேறிகள் என்பதுபோல சீமானின் கருத்துக்கள் இருந்ததால், இதை கேட்டு அருந்ததியினர் அதிர்ச்சி அடைந்தனர். சீமானின் பேச்சுக்கு அருந்ததியினர் உடனடியாக தங்கள் எதிர்ப்புகளை கடுமையான பதிவு செய்தனர்.. கண்டனங்களை தெரிவித்தனர்.

இதையடுத்து, போராட்டங்களையும் சீமானுக்கு எதிராக நடத்த துவங்கினர். இதனால் இடைத்தேர்தலில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம் செய்ய முடியாத நிலைமையும் ஏற்பட்டது... இடைத்தேர்தல் முடிந்தபிறகும்கூட, ரிசல்ட் வந்தபிறகும்கூட, தங்கள் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் விடாமல் தெரிவித்து வருகிறார்கள்.. இருப்பினும் சீமான், அருந்ததியர்கள் தெலுங்கர்கள்தான் என்பதை அழுத்தமாகவே சொல்லி வருகிறார்.

இந்த பிரச்சனை இன்னும் ஓயாத நிலையில் இன்னொரு பிரச்சனை தலைதூக்கியுள்ளது.. "நரிக்குறவர்களை நரிகாரர்கள், குறவர்கள் என்று சொல்ல வேண்டும்... குறவர் என்பது நாங்கள்தான்.. குறவர்கள் என்றால் மூத்த குடி மக்கள்" என்று சீமான் பேசியதற்கு நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளார்.. சீமான் மீது புகார் கொடுக்கப்போவதாகவும், போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

Seeman narikuravar community welfare board member condemns and warns naam tamilar party seeman

நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர்: இதுகுறித்து நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாம் தமிழர் கட்சி சீமான், நரிக்குறவ இன மக்களைக் கேவலப்படுத்தியும், இவர்கள் நரிக்குறவர்கள் அல்ல, வந்தேறிகள் என தவறான தகவல்களைப் பேசி, எங்களைத் தொடர்ந்து இழிவு படுத்திக் கொண்டே இருக்கிறார். மேலும், எங்கள் சமுதாய மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வேலைகளைச் செய்து வருகிறார்.

இதே போல், தேனி மாவட்டத்தில் வழங்கப்பட்ட இடத்தில் வசிக்கும் எங்கள் சமுதாய மக்களிடையே உள்ள ஒற்றுமையைச் சீர்குலைத்து, பிரிவினையை ஏற்படுத்தும் நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் வனவேங்கை கட்சி இரணியன் ஆகியோரை கண்டித்து வரும் 30ம் தேதி அதே மாவட்டத்தில், தமிழகத்திலுள்ள அனைத்து நரிக்குறவர் மக்களையும் திரட்டி போராட்டம் நடத்தவுள்ளோம். வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது, எங்கள் சமுதாய மக்களிடம் வாக்கு சேகரிக்க, அவர் வந்தால், கருப்புக் கொடி காண்பித்து புறக்கணிப்போம்.

கைது போராட்டம் : எனவே, நரிக்குறவர் மக்கள் வசிக்கும் அனைத்து மாவட்டங்களிலும், சீமானை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தி, அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம், அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி புகாரளிக்கவுள்ளோம். மிகவும் அடித்தட்டு மக்களான எங்கள் சமுதாயத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தி பேசுவதை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே அருந்ததியர் கூட்டமைப்பினர், சீமானை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வரும்நிலையில், நரிக்குறவர் நல வாரியமும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்துவருவது பரபரப்பை கிளப்பி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+