"வளையத்துள்" வர்றாரா சீமான்? ஓவரா நெருக்குதே.. அடுத்த "புயல்" கிளம்பிருச்சு.. போலீசுக்கும் போயாச்சு
சென்னை: சீமானுக்கு போலீசார் சம்மன் வழங்கியுள்ளதால், நேரடி விசாரணை அவரிடம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜனநாயக மாதர் சங்கமும் இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் Vs நடிகை விஜயலட்சுமி விவகாரம் வெடித்து கிளம்பி உள்ளது.. இருவருமே மாறி மாறி குற்றச்சாட்டுகளை அள்ளிவீசிக் கொண்டிருக்கிறார்கள்..

விஜயலட்சுமியை திமுக தூண்டிவிடுகிறது என்று சீமான், பகீரை கிளப்பியுள்ளதால், அரசியல் ரீதியாகவும் இந்த தாக்கம் ஏற்பட்டு வருகிறது.. மற்றொருபுறம், சீமானுக்கான நெருக்கடிகள் கூடிவருவதாகவும், இணையத்தில் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.
விஜயலட்சுமி: 2 நாட்களுக்கு முன்பு, விஜயலட்சுமியை நேரில் அழைத்து விசாரணை நடத்திய போலீசார் அவரிடம் வாக்குமூலம் வாங்கினார்கள்.. பிறகு, திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டு முன்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தியும் விஜயலட்சுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது... 7 முறை அபார்ஷன் நடந்ததாக, விஜயலட்சுமி வாக்குமூலத்தில் சொல்லி உள்ளதால், அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனால், சீமானுக்கு சம்மன் வழங்கி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளார்கள்..
அதன்படி, கடந்த வாரம் கோவை சென்றிருந்த சீமானிடம் விசாரணை நடத்த போலீசார் விரைந்திருப்பதாக தகவல்கள் வெளியானது.. பிறகு, சீமான் கைதாகப்போவதாகவும் தகவல்கள் பரபரத்தன.. சம்மன் கொடுப்பதற்காகவே போலீசார் அப்போது சென்றிருப்பதாக காரணம் சொல்லப்பட்டது. ஆனால், அப்போது அவரிடம் சம்மனும் வழங்கப்படவில்லை. சீமானிடம் போலீசார் நேற்றிரவுதான், நேரில் சம்மனை வழங்கியிருக்கிறார்கள்..
நேரில் சம்மன்: அதனால், வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில், இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராகவும் அறிவுறுத்தப்பட்டிருந்ததால், இன்று போலீசில் சீமான் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் சீமான் இன்று ஆஜராகவில்லை.. வருகிற 12-ந்தேதிதான் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராவார் என்கிறார்கள். அன்றைய தினம் சீமானிடம் போலீசார் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது..
இந்நிலையில், சீமான் விவகாரத்தில், ஜனநாயக மாதர் சங்கம் தலையிட்டுள்ளது.. நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் அரசியல் தலையீடு இல்லாமல் சீமான் மீது போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக ஆணையர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில தலைவர் வாலண்டினா, பொதுச் செயலாளர் ராதிகா உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மனு ஒன்றை தந்தார்கள்..
சீமான் விவகாரம்: பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய மாதர் சங்கத்தினர், "நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கின் விசாரணையில் சுணக்கம் அடைந்துள்ளது. அதனை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக அரசியல் கட்சியின் தலைவராக உள்ள சீமான், ஆண், பெண் சமத்துவம் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார்.
ஆனால் விஜயலட்சுமி புகார் பற்றி வெளிப்படையாக பேசாமல் அவரை கேவலப்படுத்தும் வகையிலேயே பேசி வருகிறார். நடிகை விஜயலட்சுமி குறித்து மிக மோசமான வீடியோக்களை நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டும் வருகிறார்கள்.. சீமான் இதனை கண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நடிகை விஜயலட்சுமி அப்போது அச்சுறுத்தல் காரணமாக வழக்கை வாபஸ் பெற்றிருக்கலாம். ஆனால் இப்போது நீதி வேண்டும் என்று போராடுவதால் சீமான் மீது உரிய நடவடிக்கையை போலீசார் விரைந்து எடுக்க வேண்டும்...
பரபரப்பு: எந்த ஒரு அரசியல் தலையீடும் இல்லாமல் காவல்துறை விசாரணை நடத்தி சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். நாலாபக்கமும், நெருக்கடிகள் சூழ்ந்து வரும்நிலையில், போலீசாரும் தங்கள் விசாரணையை துவங்கப்போகும் நிலையில், சீமான் விவகாரம் பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications