Seeman Periyar Issue:பெரியார் தொண்டர்கள் மீது வெடிகுண்டுகளை வீசுவேன்.. ஈரோடு பிரசாரத்தில் சீமான் பகிரங்க கொலை மிரட்டல்!
சென்னை: பெரியார் (periyar) தொண்டர்கள் மீது பிரபாகரன் தந்த வெடிகுண்டுகளை வீசுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman), ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நேற்று சீமான் பேசியதாவது: பிரபாகரனிடன் பெரியார் தொண்டர்கள் போகாதீர்கள்.. நீங்கள் வைத்திருப்பது வெறும் பெரியார் எனும் வெங்காயம்.. என் தலைவன் பிரபாகரன் கையில் வைத்திருப்பது வெடிகுண்டு.

நீ பெரியாரின் வெங்காயத்தை என் மீது வீசு.. நான் உன் மீது பிரபாகரன் தந்த வெடிகுண்டை உன் மீது வீசுகிறேன்.. என்ன நடக்கிறது என பார்.... ஏய்.. வெச்சிருக்கேன்.. இன்னும் வீசவில்லை.. வெடிகுண்டுகளை வீசினேன் என்றால் என்ன ஆவாய் என பார்த்துக் கொள்.. உன்னை புதைச்ச இடத்தில் புல் கூட முளைக்காது.. Be Carefull.. சேட்டையை வேறு எங்காவது வைத்துக் கொள்..
திராவிட குப்பைகளை உரமாக்கி தமிழ்த் தேசியத்தை வளர்க்க வந்த பிள்ளைகள் நாங்கள். பெரியார் ஆரிய அடிமை; ஆரிய கூட்டாளி மட்டுமல்ல. ஆங்கிலேய அடிமையனாகவும் வாழ்ந்திருக்கிறார். பெரியார் எந்த மதத்துக்கு எதிரான குறியீடு?
தெருநாயை கல்லெறிந்தால் 4 தெரு தள்ளி போய் குலைப்பது போல அங்கே இருந்து கொண்டு போட்டோ பொய் அது பொய் என பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.. தமிழர்கள் என்று சொல்வதே இன எழுச்சிக்கு எதிரானது என்று சொன்னவர் பெரியார்.. எந்த இன எழுச்சிக்கு எதிரானது? யாரிடம் இருக்கிறது என் கேள்விக்கான பதில்? ஒழுங்காக பேசாமல் என்னிடம் சரணடையாவிட்டால் கொன்றே போடுவேன்.. திராவிட தத்துவம் செத்துப் போய்விட்டது.. தமிழ்த் தேசியம் சத்தோடு எழுந்து வருகிறது..
பெரிய கோட்பாட்டுச் சிங்கங்கள்தானே நீங்கள்.. ஓட்டுக்கு காசு கொடுக்காமல் என்னை வெல்ல முடியுமா? திராவிடம் என்பது வைதேகி காத்திருந்தாள் கிளைமேக்ஸ் போல செத்துப் போய்விட்டது...
பல பேர் பெரியார் படத்தைப் பார்த்துக் கொண்டு கதை சொல்கின்றனர்.. நான் பெரியார் இப்படி எழுதி இருக்கிறார் என படித்துவிட்டு பேசுகிறேன்.. அது என்ன தந்தை பெரியார்? பிரபாகரன் மட்டும் திரு.பிரபாகரன்? தலைவர் பிரபாகரன் என சொல்லமாட்டீர்களா? நாங்கள் ஆட்சிக்கு வரும் போது மேதகு தலைவர் பிரபாகரன் என போட வைப்போம். இவ்வாறு சீமான் பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications