சீமான் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதே.. ஆதாரத்திற்கு ஒரு ஆதாரம் தேவையா.. சங்ககிரி ராஜ்குமார் பதிலடி!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான்தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சீமானின் புகைப்படம் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் ஆக்ரோஷமாக கூறி வந்தனர்.
கொளத்தூர் மணி உட்பட பல்வேறு தரப்பினரும் சீமானின் புகைப்படம் போலியானதாக இருக்க வாய்ப்புள்ளது என்று கூறினர். இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான புகைப்படம் அது. 15 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்.. பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் போலி என்கிறார்கள்.. அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று சவால் விடுத்தார்.

இந்த நிலையில் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாகரன் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரம் என்ன என்று கேட்டிருந்தார். 15 ஆண்டுகளாக நான் எங்கு படுத்திருந்தேன் என்றெல்லாம் கேட்டிருந்தார். அதுவே ஒரு ஆதாரம் என்று காட்டி இருக்கிறோம்.
அதற்கு ஒரு ஆதாரத்தை கொண்டு வந்து காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்பது தெரியவில்லை. அதேபோல் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதற்கான டெமோ காட்டுமாறு கூறுகிறார். இணையதளத்தில் புகைப்படங்கள் எப்படி இணைக்கப்படுவது என்பதை உலகம் முழுவதும் காட்டி கொண்டே இருக்கிறார்கள். நானும் தற்போது காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
அதேபோல் பிரபாகரனை பொய் என்று சொல்லிவிட்டேன் என்கிறார். இந்த விவகாரத்தில் நாதகவைச் சேர்ந்த செங்கோட்டையனை பேச சொல்லி இருக்கலாம். அவர் வந்தால் நான் சொல்வது உண்மையா? பொய்யா? என்பது தெரிந்துவிடும். வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் நன்றி சொல்லும் வகையில் அவரிடம் பேசிய போது, சமூகநீதி சார்ந்து குரல் கொடுப்பதற்கு நன்றி.
சமூகநீதி சார்ந்து எந்த இடத்தில் கை வைத்தாலும் அது பெரியாரிடம் தான் சென்று முடியும். அதனால் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும், பெரியாருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிட வேண்டாம் என்று கூறினேன். அப்போது சீமான் உடனடியாக அழைப்பை துண்டித்துவிட்டார். மீண்டும் அழைத்து சொன்ன போது, சரிடா தம்பி என்று வைத்துவிட்டார்.
நான் சொன்னது அவருக்கு பிடிக்கவில்லை. ஆனால் அதனை அப்படியே மாற்றி, வன்னியர் மக்களை கைவிட்டுவிடாதீர்கள் என்று சொன்னதாக உண்மைக்கு மாறான தகவலை கூறியுள்ளார். இதனை சீமான் மறந்துவிட்டு சொல்லவில்லை. ஏனென்றால், நான் பேசுவது அவருக்கு பிடிக்கவில்லை. தற்போது அதனை மாற்றி பேசுகிறார். என்னை சாதியவாதியாக நிறுத்த சீமான் முயற்சித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications