"லெமன் சாதம் ரெடி"ன்னு எழுதி வெச்சிருக்கிற.. கடைகளுக்கு இருக்கு ஒருநாள் அடி.. சீமான் அதிரடி!

நித்யானந்தா என் ரோல் மாடல் என்று சீமான் கிண்டல் செய்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "லெமன் சாதம் ரெடி"ன்னு எழுதி வெச்சிருக்கிற எல்லா கடைகளுக்கும் இருக்கு ஒருநாள் அடி.. படிக்கும்போது ரொம்ப வலியா இருக்கு என்ற சீமான், ரஜினியை யாரும் தவறாக விமர்சிக்க வேண்டாம்" என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் இணையதளபாசறை தம்பிகள் மத்தியில் கட்சியின் எதிர்கால திட்டம் குறித்து சீமான் விவரித்து பேசினார். அப்போது அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்:

"நான் முடிவெடுத்துட்டேன்.. இவங்கடோ பார்ப்பேன்.. நம்முடைய வழிகாட்டி நித்யானந்தாதான்.. எனக்கு பிரச்சனை இல்லை.. எனக்கு அவர்தான் ரோல் மாடல்... நான்கூட நினைப்பேன், இவ்ளோ போராடிட்டு இருக்கிறதை விட தனியா ஒரு தீவு வாங்கிட்டுகூட போயிடலாம்.

தனி தீவு

தனி தீவு

அங்க போராட்டமெல்லாம் இருக்காது.. உள்ளே வரும்போதே சாதியை செருப்பு வைக்கிற இடத்துல விட்டு வா.. மதத்தை வெளியே விட்டுட்டு உள்ளே வா..ன்னு சொல்லணும்.. அதனால 10 தீவு வாங்கிட்டு போய்டலாம்னு இருக்கேன்.. என்ன ஒரு தீவு 200 கோடி, 300 கோடின்னு சொல்றாங்க..

கருப்பு பணம்

கருப்பு பணம்

இந்த கொள்ளை அடிச்சவங்களை எல்லாம் ஒரு இருட்டு அறையில் பூட்டி வெச்சு, சிவாஜி படத்துல ரஜினி சொல்வாறே, "ஆபீஸ் ரூமுக்கு போங்க"ன்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரி உள்ளே கொண்டு வச்சு அவங்க கிட்ட கேட்கணும். "எவ்ளோ இருக்கு கையில, நீங்களா தர்றீங்களா, நாங்களா எடுத்துக்கட்டுமா, நீங்களா தந்தா வெளியே இருப்பீங்க, நாங்களா எடுத்துக்கிட்டா உள்ளே இருப்பீங்க, வசதி எப்படின்னு" கேட்டு கொள்ளை அடிச்சதை பூரா எடுத்து ஒரு தீவை வாங்கிட்டு போக வேண்டியதுதான்.. 20 தீவுகளை விலைக்கு வாங்கி அங்கு தூய தமிழர்களை குடி அமர்த்த போறேன்" என்றார்.

தமிழ்

தமிழ்

தொடர்ந்து பேசிய சீமான், ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுறது என்ன பழக்கம்.. யாராவது போன் பண்ணினால் சரின்னு சொன்னால் பரவாயில்லை.. "சரி, ஓகே, ரைட்டு"ன்னா எப்படி? சரின்னு சொல்லி, இல்லே ஓகேன்னு சொல்லு, இல்லை ரைட்டுன்னு சொல்லு.. இப்படி ஏதாவது ஒன்னு சொல்லி தொலைங்கடா எழவு எடுத்தவங்களே.. ஏன் இப்படி மூணுத்துலயுமா? "ஆக்சுவலி"ன்னு ஆரம்பிப்பான், அதுக்குமேல இங்கிலிஷ் வராது.. நான் குறிச்சு வெச்சிருக்கேன், "லெமன் சாதம் ரெடி"ன்னு எழுதி வெச்சிருக்கிற எல்லா கடைகளுக்கும் இருக்கு ஒருநாள் அடி.. படிக்கும்போது ரொம்ப வலியா இருக்கு" என்றார்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

அதேபோல, ரஜினி குறித்து தவறாக பதிவிட வேண்டாம் என்றும் சீமான் அறிவுறுத்தினார். இது சம்பந்தமாக பேசும்போது, "ரஜினிகாந்த்துடன் நாம் முரண்படறோம் என்றால் அது அரசியலோட.. அவரோட கருத்தோட.. தனிப்பட்ட ரஜினிகாந்த் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு.. அவர் படங்களை ரசிப்பேன்... என் கல்யாணத்துக்கு எத்தனையே பேருக்கு அழைப்பு தந்தேன்.. பலர் வரல.. ஆனா என் தம்பி தமிழ்க்குமரன்தான் போய் அவருக்கு அழைப்பிதழ் தந்துட்டு வந்தான்.

கர்நாடகம்

கர்நாடகம்

நான்கூட கொண்டு போய் தரல.. ஆனா அவர் தன் கைப்பட வாழ்த்து எழுதி ரஜினிகாந்த்-ன்னு கையெழுத்து போட்டு தந்தார், அது இன்னமும் என்கிட்ட இருக்கு. அவர் மேல மதிப்பு உண்டு, ஆனால், அவர் மண்ணில், மராட்டியத்தில், கர்நாடகத்தில் போய் கட்சி ஆரம்பித்தால், அவரை வாழ்த்தி நான் போய் பேசுவேன். அப்படி வாழ்த்தும்போது என்னை மாதிரி யாரும் பேச முடியாது. ஆனால், என் நிலத்தில் மானத்தமிழ் மண்ணை ஆள மராட்டியர் நினைப்பது மிகப்பெரிய தவறு! என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+