உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படத்துக்கு அமைச்சர்களின் ஓசி டிக்கெட்,பிரியாணி-இது திராவிட மாடலா? சீமான்
vசென்னை: திமுக எம்.எல்.ஏ.வும் அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்கு அமைச்சர்களே ஓசி டிக்கெட் மற்றும் பிரியாணி வாங்கி தருவதுதான் திராவிட மாடலா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
உதயநிதி நடிப்பில் வெளியாகி இருக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் சமூக நீதி குறித்து பேசுகிறது என்பது பொதுவான பாராட்டு. இப்படத்தின் முதல் காட்சி தொடங்கி தற்போது வரை அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கி விநியோகித்து வருகின்றனர்; உதயநிதியின் படத்தை பார்க்க வருகிறவர்களுக்கு உணவும் வழங்குகின்றனர் என்கிற தகவல்களும் வருகின்றன.

மேலும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்த்துவிட்டு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் அது தொடர்பான படங்களையும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கவும் செய்கின்றன.
Recommended Video

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தை இந்தியில் எடுத்தால் பிரமாதமாக இருக்கும் என்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. அந்த படமே ஆர்ட்டிக்கிள் 15 என்ற இந்தி படத்தில் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்பது அமைச்சர் நேருவுக்கு தெரியவில்லை. அமைச்சர்கள் நெஞ்சுக்கு நீதி படத்துக்கு இலவசமாக டிக்கெட் கொடுக்கின்றனர்; படம் பார்த்துவிட்டு வந்தால் பிரியாணி தருகின்றனர். ஆனாலும் கூட்டம் வரவில்லை என்கின்றனர். திமுக எம்பி ஒருவர் பெரியாரை நான் பார்த்தது இல்லை; உதயநிதியை நெஞ்சுக்கு நீதி படத்தில் காக்கி உடையில் பெரியாராக பார்க்கிறேன் என்கிறார். இது என்ன பெரியாருக்கு வந்த சோதனை! என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சீமான், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டி பதிவிடுகிறார்கள். டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள்.. படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள்.
சிறப்பான மக்கள் பணி! வாழ்க திராவிட மாடல்! என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
-
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்!












Click it and Unblock the Notifications