“சசிகலா காலில் தவழ்ந்து விழுந்து கும்பிட்டீங்களே.. அதான் சுயமரியாதையா?” எடப்பாடி மீது சீமான் அட்டாக்
சென்னை: "எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களே, முதலமைச்சர் பதவியை சசிகலா அறிவிக்கும்போது காலில் தவழ்ந்து விழுந்து கும்பிட்டீர்களே.. அதுதான் சுயமரியாதையா?" என சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் பொதுக் கூட்டத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நவம்பர் 1 தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று எழுச்சியுரை ஆற்றினார். முன்னதாக தமிழ்நாட்டு கொடியை ஏற்றினார்.

அப்போது பேசிய சீமான், "தமிழ்நாட்டில் இந்திக்காரனுக்கு ஓட்டு உரிமை கொடுத்தால் அதை முதல் ஆளாக எதிர்ப்பேன். வரலாறு என நான் கூறினால் உடனே அஜித் திரைப்படம் என நினைக்க கூடாது. வரலாறு திரும்புகிறது என்பது செத்தவர்கள் வீட்டிற்குச் சென்று பார்ப்பது. ஆனால், இப்போது செத்தவர்கள் வீட்டில் இருப்பவர்களை வீட்டிற்கு அழைத்துப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. சமூக தலைவர்களுக்கு அவர்களது நினைவிடம் சென்று மரியாதை செலுத்த வேண்டும். ஒரே கட்டடம், ஒரே இடம் என மரியாதை செலுத்துகிறார்கள்.
நெல் மணிகளை வீதியில் விட்டுவிட்டு ஆந்திராவில் இருந்து நெல் வாங்கும் இவர்களை கருக்கு மட்டையை வைத்து அடிக்க வேண்டும். 2026-ல் இவர்களுக்கு பதில் சொல்வோம்" என்றார்.
மேலும் பேசிய சீமான், "சுயமரியாதை என்று சொல்ல திமுகவில், அதிமுகவில் ஒருவருக்காவது தகுதி இருக்கிறதா? உண்மையான திராவிடத்தின் வாரிசு நாங்கள் தான் என்று சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. உங்களை ஆளை பார்த்தால் அப்படித் தெரியவில்லையே ஐயா.. சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை என அறிக்கையில் சொல்கிறார். சமூக நீதி என்றால் என்ன ஐயா?
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களே, முதலமைச்சர் பதவியை சசிகலா அறிவிக்கும்போது காலில் தவழ்ந்து விழுந்து கும்பிட்டீர்களே.. அதுதான் சுயமரியாதையா?" என சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
Thaaimaaman seer: சீமான் மகளுக்கு தாய்மாமன் சீர் ஏன்? அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு விளக்கம் -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications