என்னது நான் விஜய்யை திட்டினேனா.. செய்தியாளரிடம் சீறிய சீமான்
சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடங்கப்பட்டுள்ளது. இது அரசியல் ரீதியாக பல்வேறு எதிர்ப்புகளையும், சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக மத்திய பாஜக, மாநில திமுக அரசுக்கு இடையே பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் நாம் தமிழர் சீமான் இந்த விவகாரத்தில் திமுக மீது விமர்சனம் வைத்துள்ளார். மேலும் விஜய் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் வைரலாகி வருகிறது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாலியில் பணிபுரிந்த 5 தமிழர்களை தீவிரவாதிகள் கடத்தியது அதிர்ச்சியளிக்கிறது. கடத்தப்பட்டவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாலிக்கு வேலை தேடிச் செல்லும் நிலைக்கு இளைஞர்களை ஆளாக்கியதுதான் திமுகவின் நான்கரை ஆண்டு சாதனை.

சேட்டைக்கு அளவில்லை
தேர்தல் ஆணையம் யாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்வது தமிழ்நாடு அரசா அல்லது தேர்தல் ஆணையமா. SIR விவகாரத்தில் திமுக நாடகம் நடத்துகிறது. அந்த நடவடிக்கையை தீவிரமாக எதிர்க்கும் திமுக, உதவி எண்களை ஏன் அறிவிக்கிறது. அன்று வாக்காளர்கள் ஆட்சியாளர்களை தீர்மானித்தார்கள். இன்று ஆட்சியாளர்கள் வாக்காளர்களை தீர்மானிக்கிறார்கள்.
இந்த சிறப்பு சீர்திருத்த அதிகாரிகளை நியமித்தது யார். இவர்களா தேர்தல் ஆணையமா. அவர்கள் சொல்வதை எல்லாம் நம்ப வேண்டுமா. அவசர அவசரமா சட்டசபையை கூட்டி எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஒருவன் இரண்டு வாக்குரிமை வைத்துள்ளனர், இறந்தவன் வாக்களித்துள்ளான் என்பதை இப்போதுதான் கண்டறிந்தீர்களா. எத்தனை நூற்றாண்டுகள் ஏமாற்றுவீர்கள். உங்கள் சேட்டைக்கு அளவில்லை. " என்றார்.
விஜய் பஞ்சாயத்து
அப்போது செய்தியாளர் ஒருவர், "உங்களின் கடந்த வருட பிறந்தநாளில் வாழ்த்திய விஜய் நீங்கள் திட்டிய பிறகு இந்த வருடம் வாழ்த்து சொல்லவில்லை" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சீமான், "கேள்வி கேட்டது விமர்சனமாகுமா. நான் திட்டினேன் என்று யார் சொன்னார். ஒன்று திராவிடத்தின் பக்கம் நிற்க வேண்டும் அல்லது தமிழ் தேசியம் பக்கம் நிற்க வேண்டும்.
சுதந்திரத்திற்கு போராடினால் ஒன்று காந்தி பக்கம் அல்லது சுபாஷ் சந்திர போஸ் அல்லது வெள்ளைக்காரன் பக்கம் நிற்க வேண்டும். எதுவுமில்லாமல் நடுநிலை என்றால் எப்படி. இந்த முறை மறந்திருப்பார். அதை விடுங்க. அது ஒரு பிரச்சனையா. இவ்வளவு பெரிய பிரச்சனையை பேசிக் கொண்டிருக்கிறேன். இதை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்." என்றார்.
-
ஒரு மாதத்தில் சிதைந்த விஜய்யின் 'ஒற்றை அதிகார மையம்' உறுதி? ஐஏஎஸ் அதிகாரிகளே புதிய பவர் சென்டர்? -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
விஜய் உடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு.. கூட யாருன்னு பாருங்க..! -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
நிலைமை மோசமாகுது! அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள்! சிங்கப்பெண் சிறப்புப் படை ஏன் தோற்றது? -
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா












Click it and Unblock the Notifications