நீங்க சொன்னா நான் பெத்துக்கணுமா? 3 புள்ளைய பெத்து யாரு வளர்ப்பா? மோகன் பாகவத்துக்கு சீமான் கேள்வி
சென்னை: நீங்கள் 3 குழந்தை பெத்துக்கணும்னு சொன்னா நான் பெத்துக்கணுமா? அந்த குழந்தையை யார் வளர்ப்பா என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் சீமான் மேலும் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: உணவு, உடை, மதம், வழிபாடு, குழந்தை பெற்றுக் கொள்ளுதல் எல்லாம் தனிமனித உரிமை. இதையெல்லாம் சேர்த்துதான் சுதந்திரம் என்று சொல்கிறோம்.

நீங்கள் 3 குழந்தை பெத்துக்கணும்னா நான் பெத்துக்கணுமா? அந்த குழந்தைகளுக்கு சோறு நீங்கள் போடுவியா? அந்த குழந்தைக்கு படிப்பு யாரு கொடுப்பா? கல்வி, மருத்துவம், மின் உற்பத்தி விநியோகம், துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்டவை எல்லாம் தனியார்மயமாகிவிட்டது.
3 பிள்ளையை பெத்து யார் வளர்ப்பா? நாம் இருவர் நமக்கு இருவர்னு கொண்டு வந்தது யார், நாம் இருவர் நமக்கு ஒருவர்னு கொண்டு வந்தது யார், நாம் இருவர் நமக்கேன் இன்னொருவர் என சொன்ன போது நீங்கள் என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள்.
இந்த 3 குழந்தைகளை இந்துக்கள் மட்டும் பெத்துக்கணுமா, இல்லை இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ள அனுமதி இருக்கானு கேட்டுச் சொல்லுங்கள். அதுக்குனு தனி சட்டம் வந்தாலும் வரும். இதெல்லாம் ஒரு பிரச்சினையாகிவிட்டது. அவனவன் குடியிருக்க வீடு இல்லாமல் தார்பாயை கட்டித் தூங்கிக் கொண்டிருக்கிறான். 3 பிள்ளைய பெத்துக்கணுமாம், இவர் சொன்னா பெத்துக்கணுமா?
நாடெங்கும் மது, கணக்கில்லாத போதை பொருள் நடமாடிக் கொண்டிருக்கும் போது எங்கிருந்து 3 பிள்ளை பெத்துக்கிறது. நீட் வந்தால் மருத்துவ படிப்பில் கட்டண கொள்ளை ஒழியும் என்றார்களே, இப்போது மருத்துவ சீட் எவ்வளவு சொல்லுங்கள். ஒரு இட்லி 1000 ரூபாய், ஒரு கிலோ அரிசி ரூ 1000 வர வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், "ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். மக்கள்தொகை குறைந்த சமூகம் அழிந்துவிடும் என்பதால், நாட்டின் வளர்ச்சிக்கு குடும்பங்களின் பங்கு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
அவரது கருத்துக்களின் முக்கிய அம்சங்கள்
மக்கள்தொகை சமநிலை: ஒரு சமூகத்தின் கருவுறுதல் விகிதம் 2.1 சதவீதத்திற்கும் கீழ் குறைந்தால், அந்த சமூகம் தானாகவே அழிவை நோக்கிச் செல்லும் என்று மக்கள்தொகை அறிவியல் ஆய்வுகள் கூறுவதாக அவர் தெரிவித்தார்.
இந்திய மக்கள்தொகைக் கொள்கை: இந்தியாவின் மக்கள்தொகைக் கொள்கையும் மொத்த பிறப்பு விகிதம் 2.1 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறது என்றும், எனவே ஒவ்வொரு தம்பதியும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது அவசியம் என்றும் அவர் கூறினார்.
சமூக வளர்ச்சி: சமூகத்தின் வளர்ச்சிக்கு குடும்பங்களின் பங்களிப்பு அவசியம், மற்றும் ஒரு சமூகம் நிலைத்திருக்க மக்கள் தொகை சமநிலை முக்கியம்.
இந்த கருத்துக்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சிலர் அவரது கருத்தை ஆதரித்தாலும், சிலர் மக்கள்தொகை கட்டுப்பாடு குறித்து பேசும் அரசாங்கக் கொள்கைகளுக்கு முரணாக அவரது கருத்து இருப்பதாக விமர்சித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications