திருப்பதி, சபரிமலையில் 'கை'வைத்துவிட்டு தமிழ்நாட்டு கோவில்களை எடுக்க வரலாம்...மோடிக்கு சீமான் பதிலடி
சென்னை: தமிழ்நாட்டு கோவில்கள் குறித்து பேசும் பிரதமர் மோடி திருப்பதி, சபரிமலை கோவில்களை கையகப்படுத்திவிட்டு பின்னர் பேசலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
இது தொடர்பாக சீமான் சென்னையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லையா அவருக்கு? மண்ணடியில் இருக்கிற காளிகாம்பாள் கோவிலுக்கு அறங்காவலர் நியமனத்தை அறிவித்தது தமிழ்நாடு அரசு. உடனே எங்கே இருந்து பிரதமர் மோடி தமிழ்நாடு கோவில்களை அரசு ஆக்கிரமித்துள்ளது என பேசுகிறார் பாருங்க? நாட்டில் இது பிரச்சனையா அவருக்கு?

கோவில்களையும் எடுங்க: நான் என்ன சொல்கிறேன்.. என் மாநில கோவில்களை நீங்க எடுங்க.. எல்லாத்தையும் நீங்களே எடுங்க.. கல்வியை எடுத்துட்டுப் போய் விற்றுவிட்டீர்கள். மருத்துவதுறையை எடுத்துக் கொண்டு போய் விற்றாச்சு.. குடிநீரை விற்றாச்சு.. தெருவோர சாலைகளைப் போட்டு 100 கி.மீக்கு ஒருத்தருக்கு டெண்டர் விட்டாச்சு.. இதனையும் எடுத்துக் கொண்டு போய் விற்றுவிடுங்களேன்..
அங்க கை வையுங்க... : ஆனால் மகாராசா, முதலில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலை எடுங்க.. அப்புறம் சபரிமலை ஐயப்பன் கோவிலை கேரளாவில் எடுங்க.. அவன் கொடுத்துவிட்டால் என் கோவிலையும் எடுத்துட்டு போங்க.. கை கட்டி நிற்கிறேன். எடுத்திருங்க பார்க்கலாம்? அப்படியே.... பஞ்சாப் பொற்கோவிலையும் எடுத்துடுங்க.. கொன்னே போடுவான்.. இதெல்லாம் மக்களுக்கு ஒரு பிரச்சனையா தம்பி? அரசு எங்ககிட்ட இருக்கும் போதே 2800 சிலைகளைக் காணவில்லை. எங்க போச்சுன்னு தெரியலை? இது ஒரு பிரச்சனையா?
காவிரியும் பிரதமர் மோடியும்: ஒருநாட்டின் பிரதமர் பேசுகிறார்.. காவிரி நதிநீருக்காக "இந்தியா" கூட்டணியில் இருக்கிற இரண்டு கட்சிகள் சண்டை போடுவதாக பிரதமர் மோடி பேசுகிறார்.காவிரி நீருக்கும் பிரதமர் மோடிக்கும் சம்மபந்தமே இல்லை? எங்களுக்கு அவர் பிரதமர் இல்லை? காவிரி நதிநீர் உரிமையை பெற்றுத் தரும் கடமை அவருக்கு இல்லை? எவ்வளவு பொறுப்பற்ற வார்த்தையை பேசுகிறார் பிரதமர் மோடி... போன முறை கர்நாடகாவில் பாஜக ஆட்சி செய்த போது காவிரி நீரை தர சொன்னீர்களா? தமிழரை அடித்து விரட்டியபோது தலையிட்டு தீர்வு கண்டீர்களா? எங்களுக்கு எல்லாம் வேறு ஒருவர் பிரதமர் இருப்பது போலவே பேசுகிறார்.. இவ்வாறு சீமான் பேசியதாக அந்த வீடியோ பகிரப்படுகிறது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications