இத பத்தி பேசுவோமா.. கருணாநிதி க்யூ பிராஞ்ச் தொடங்கியதே பழிவாங்கத்தான்.. சீமான் கிளப்பிய விவகாரம்!
சென்னை: கருணாநிதி கியூ பிராஞ்ச் தொடங்கியதே பழிவாங்கத்தான், ஆட்சியில் இருப்பவர்கள் அடுத்தவர்களை பழிவாங்குவதற்காகவே விசாரணை அமைப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன என காட்டமாக விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைகளுக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கதறி அழுத அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். விசாரணை அமைப்புகளை மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக பயன்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கை குறித்துப் பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "இது ஜனநாயக நாடு, மக்களாட்சி கோட்பாட்டை கொண்ட ஒரு நாடு, அதிகாரம் மக்கள் கையில் இருக்கிறது என்று நாம் நினைத்தோம். அப்படித்தான் கட்டமைத்தோம்.
தேர்தல் ஆணையம், நீதிமன்றம், வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை எல்லாம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகள் என நினைத்தோம். அதிகாரம் தலையிடாது, சுதந்திரமாக இயங்கும் என நினைத்தோம். இப்போது அதெல்லாம் கிடையாது. இவை அனைத்தும் ஆட்சியில் இருப்பவர்களின் ஐந்து விரல்கள். அது நீட்டினால் நீட்டும், மடக்கினால் மடங்கும்.
என்னை பிடிக்கவில்லை என்றால் நாளை என் வீட்டில் சோதனை வரும். ஏன் கைது பண்ணினார்கள், எதற்காக கைது பண்ணினார்கள் என வீட்டில்கூட சொல்லவேண்டியது இல்லை. இருட்டறையில் போட்டு சாகடிப்பதால்தான், சர்வாதிகாரம் எனச் சொல்லாமல் கொடுங்கோன்மை ஆட்சி என இதைச் சொல்கிறேன்.
பழிவாங்குவதற்காகத்தான் விசாரணை ஏஜென்சிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கருணாநிதி கியூ பிராஞ்ச் தொடங்கியதே பழிவாங்கத்தான். இலங்கை மக்களை சித்திரவதை செய்ய சிறப்பு முகாம் என பெயர் வைத்திருக்கிறார்கள். நாட்டில் ஜனநாயகம் எங்கும் இல்லை." என காட்டமாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு என்று தனியாக ஒரு பிரிவு கருணாநிதி ஆட்சிகாலத்தில் ஏற்படுத்தப்பட்டது. கியூ பிராஞ்ச் அலுவலகம் டிஜிபி அலுவலகத்தில் இருக்கிறது. அதற்கு டிஐஜி தலைமையில் ஒரு தனி அதிகாரியும் இருக்கிறார். துணைப் பிரிவுகளும் இருக்கின்றன. க்யூ பிராஞ்ச் பிரிவு மாநில அரசின் முழுக் கட்டுப்பாட்டில், முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications