சீமான் இதயத்திலிருந்து பேசவில்லை.. போன மாசம் ஒரு பேச்சு.. இந்த மாசம் ஒரு பேச்சு! தவெக சம்பத் பதிலடி
சென்னை: தவெக தலைவர் விஜய் குறித்து காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான். இந்நிலையில், விஜயை விமர்சித்து சீமான் இதயத்திலிருந்து பேசவில்லை என்பதால் நாங்கள் மூளைக்குள் கொண்டுபோகவில்லை என தவெக மாநாட்டில் கொள்கைகளை வாசித்த சம்பத் குமார் கூறியுள்ளார்.
தவெக எனும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று முன் தினம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் கோலாகலமாகவும் கொண்டாட்டமாகவும் நடந்தேறி இருக்கிறது. இந்த மாநாட்டில் சுமார் 3 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பெரியாரின் கடவுள் மறுப்பை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதே நேரத்தில் பகுத்தறிவு பெண்கள் முன்னேற்றம் சமூக நீதி ஆகியவை தங்களது கட்சியின் கொள்கைகளாக இருக்கும் என விஜய் கூறியிருந்தார்.
இது பல விமர்சங்களை பெற்றுள்ளது. பகுத்தறிவுக் கொள்கையில் முதலாவது கடவுள் மறுப்பு எனும் பெரியாரிய ஆதரவாளர்கள் விஜய் குழப்ப மனநிலையில் இருப்பதாக விமர்சிக்கின்றனர். அதே நேரத்தில் திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என விஜய் கூறியிருந்தார். இதுகுறித்து பேசிய நாம் தமிழர் கட்சி சீமான், விஜயின் கருத்து கருவாட்டு சாம்பார் போல் உள்ளது என கூறினார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சென்னையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான் விஜயை கடுமையாக விமர்சித்தார். கூட்டத்தில் பேசிய அவர்," விஜயை போல் நான் குட்டி கதை சொல்பவன் இல்லை வரலாற்றை கற்பிக்க வந்திருக்கிறேன் இது ஒரு பண்பாட்டு புரட்சி நீங்கள் இனிமேல் தான் பெரியார் அம்பேத்கரை படிக்க வேண்டும் நாங்கள் அதில் பிஹெச்டி வாங்கி விட்டோம்" எனவும் விமர்சித்தார்.
மேலும் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்," ஒன்னு கொள்கைய மாத்தனும், இல்லை எழுதி கொடுக்கிறவன மாத்தனும் ரெண்டையும் வச்சிகிட்டு குழப்பிட்டு இருக்கக்கூடாது, ஆளுநர் ஏன் வேண்டாம் என்று விளக்கம் கொடுக்க முடியுமா?, உன்னுடைய மொழிக் கொள்கை தப்பா இருக்கு, திராவிடமும், தமிழ் தேசியமும் தேவை என பேசுவதே தப்பா இருக்கு.. கூட்டம் எல்லாருக்கும் வரும், கடை திறப்பு விழாவுக்கு வந்த நயன்தாராவுக்கு 4 லட்சம் பேர் வந்தார்கள்" என கூறினார்.
இந்நிலையில், விஜயை விமர்சித்து சீமான் இதயத்திலிருந்து பேசவில்லை என்பதால் நாங்கள் மூளைக்குள் கொண்டுபோகவில்லை என தவெக மாநாட்டில் கொள்கைகளை வாசித்த சம்பத் குமார் கூறியுள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,"விஜயை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதயத்தில் இருந்து பேசவில்லை என்பதால் நாங்கள் மூளைக்குள் கொண்டு போகவில்லை. மாநாட்டிற்கு முன்பு சீமான் பேசியதற்கும் மாநாட்டின் வெற்றிக்கு பின்பு சீமான் பேசியதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது.
இப்படி பேசுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பதில் கூறினால் எங்கள் பயணத்தின் வேகம் தடைபடும். யாரை விமர்சனம் செய்ய வேண்டும் யாரை கடந்து போக வேண்டும் என என்பதை விஜய் எங்களுக்கு உணர்த்தி உள்ளார்" என கூறியுள்ளார். இவர் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை விளக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications