கொளத்தூர் டூ திருவொற்றியூர்.. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது ஏன்?.. சீமான் தந்த அசத்தல் விளக்கம்!
சென்னை: கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது ஏன் என்று சீமான் விளக்கி உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக தற்போது நாம் தமிழர் கட்சி டாப் கியரில் சென்று கொண்டு இருக்கிறது. திமுக, அதிமுக இன்னும் முழுமையாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிக்கவில்லை. ஆனால் நாம் தமிழர் கட்சியோ கூட்டணி பற்றியெல்லாம் யோசிக்காமல் துணிச்சலாக தேர்தலை தனியாக சந்திக்க உள்ளது.
இதற்காக நேற்று நாம் தமிழர் கட்சி தங்கள் வேட்பாளர்களை அறிமுகம் செய்தது. சட்டசபை தேர்தலுக்கான 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சி நேற்று அறிவித்தது.

ஒரே மேடை
ஒரே மேடையில் 234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்தார். ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. லோக்சபா தேர்தல் போலவே 50% பெண் வேட்பாளர்களை சட்டசபை தேர்தலிலும் களமிறக்குவேன் என்று குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் நேற்று 50% பெண் வேட்பாளர்களை சீமான்அறிவித்தார்.

பெண் உரிமை
234 வேட்பாளர்களில் 117 ஆண் வேட்பாளர்கள் ,117 பெண் வேட்பாளர்கள் நாம் தமிழர் சார்பாக சீமான் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட போகிறேன் என்று சீமான் முன்பு கூறி இருந்தார்.

எதிர்பார்ப்பு
இதனால் கொளத்தூர் தொகுதியில் சீமான் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் கொளத்தூர் தொகுதிக்கு பதிலாக திருவொற்றியூர் தொகுதியை சீமான் தேர்வு செய்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது ஏன் என்று சீமான் விளக்கி உள்ளார். அதில், கொளத்தூரில்தான் போட்டியிடலாம் என்று இருந்தேன்.

ஆனால்
ஆனால் மக்கள் நலன்தான் முக்கியம். ஒருவரை வீழ்த்துவது முக்கியம் இல்லை. ஒருவரை வீழ்த்துவதை விட மக்களுக்கு என்ன செய்கிறேன் என்பதே முக்கியம். இதனால் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடாமல் திருவொற்றியூர் தொகுதியை தேர்வு செய்து இருக்கிறேன், என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications