தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடாவை கண்டுகொள்ளவில்லை.. வாக்களித்தபின் சீமான் ஆவேசம்!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வேளாங்கண்ணி பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.
மனித கழிவை மனிதர்களே அள்ளும் நிலைக்கு முடிவு கட்ட முடியாத இந்தியா, வாக்குப்பதிவுக்கு எந்திரங்களை பயன்படுத்துகிறது என்று சீமான் கூறினார்.

வாக்குப்பதிவு தீவிரம்
தமிழகம் முழுவதும் இன்று காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இது தவிர நடிகர்கள் ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் வாக்களித்தனர்.

ஸ்டாலின் வாக்குப்பதிவு
மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம், கமல்ஹாசன், துரைமுருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வாக்களித்தனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வேளாங்கண்ணி பள்ளியில்தனது வாக்கினை செலுத்தினார்.

சீமான் பேட்டி
சுமார் ஒரு மணி நேரம் மக்களோடு, மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார் சீமான். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சீமான் கூறியதாவது:- வளர்ந்த நாடுகள் அனைத்தும் ஓட்டுச்சீட்டு முறையையே கடைபிடிக்கின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும்தான் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

பணப்பட்டுவாடா நடக்கிறது
மனித கழிவை மனிதர்களே அள்ளும் நிலைக்கு முடிவு கட்ட முடியாத இந்தியா, வாக்குப்பதிவுக்கு எந்திரங்களை பயன்படுத்துகிறது. நமது மாணவிகள் நீட் தேர்வு எழுத சென்றால் பிட் வைத்திருக்கிறார்களா என்று கம்மலில் கூட சோதனை செய்கின்றனர். ஆனால் கட்சிகளின் பணப்பட்டுவாடா நடக்கிறது. இதை தடுக்க முடியவில்லை. பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை என்று சீமான் கூறினார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications