சாமியார் தலையை சீவுங்க! நான் 100 கோடி தரேன்! கசாப்பு கடைக்காரர் கணக்கா பேசுறாரே.. சீமான் கொந்தளிப்பு
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை சீவ ரூ 10 கோடி அறிவித்த சாமியாரின் தலையை சீவினால் நான் ரூ 100 கோடி தருகிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக கோபத்தை கொப்பளித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது சனாதனம் குறித்த பிரச்சினை தேசிய அளவில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. உதயநிதி மீது மாநில காவல் நிலையங்களில் பாஜகவினரும் சனாதனவாதிகளும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தினரும் இந்து அமைப்புகளும் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர்.

சனாதனம் என்பதை எதிர்க்கக் கூடாது, ஒழிக்க வேண்டும் என்றும் அவற்றை டெங்கு, கொரோனா, மலேரியா போல் ஒழித்துக் கட்ட வேண்டும் என்றும் உதயநிதி சென்னையில் ஒரு மாநாட்டில் பேசியதுதான் இத்தனை பிரச்சினைகளுக்கு ஆரம்பமாக உள்ளது.
உதயநிதியின் இந்த கருத்துக்குத்தான் பாஜகவினர் உள்ளிட்டோர் எதிர் கருத்துகளை கூறி வருகிறார்கள். இந்த நிலையில்தான் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர்தான் உதயநிதியின் தலைக்கு ரூ 10 கோடி கொடுப்பதாக கூறியுள்ளார். மேலும் உதயநிதியின் புகைப்படத்தை வாளால் கிழித்து அதை கொளுத்தியும் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதற்கு உதயநிதி பதிலளிக்கையில் என் தலையை சீவ எதுக்கு ரூ 10 கோடி , 10 ரூபா சீப்பு இருந்தால் போதுமே என நக்கலடித்திருந்தார். இந்த நிலையில் 10 கோடி சன்மானத்தை அயோத்தி சாமியார் அதிகரிக்கவும் தயார் என முறைத்தபடியே தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழகத்தில் அயோத்தி சாமியாரின் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ந்து வருகிறது.
ஆங்காங்கே உதயநிதியை ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சாமியாருக்கு கண்டனங்கள் குவிகின்றன. ஒரு அமைச்சரை சாமியார் மிரட்டுவதா அவரை கைது செய்ய வேண்டும் என்ற குரல்கள் கேட்கின்றன. இந்த நிலையில் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், அவர்களுடைய நாட்டுக்கு பாரத் என வைத்துக் கொள்கிறார்கள். எங்கள் நாடு தமிழ்நாடுதான். ஒரே நாடு என்றால் கர்நாடகா ஏன் தமிழகத்திற்கு காவிரி நீர் தர மறுக்கிறது என கேள்வி எழுப்பினார். மேலும் அவரிடம் உதயநிதிக்கு சாமியார் விடுத்த மிரட்டல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சீமான் கூறுகையில் தம்பி உதயநிதியின் தலையை சீவ ரூ 10 கோடியை சாமியார் சன்மானமாக அறிவித்திருந்தார். இப்போது நான் அறிவிக்கிறேன், அந்த சாமியாரின் தலையை சீவினால் நான் ரூ 100 கேடி தருகிறேன். நாக்கை வெட்டுவது, தலையை வெட்டுவது என பேசுகிறாரே இவர் என்ன சாமியாரா இல்லை கசாப்புகடைக்காரரா என கேள்வி எழுப்பியிருந்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications