சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினிக்கு எந்த நாட்டில் ஆதரவு இருக்கோ அங்கு போய் கட்சி தொடங்கலாமே.. சீமான் கடும் விமர்சனம்

Google Oneindia Tamil News

சென்னை: எந்த நாட்டில் ஆதரவு இருக்கிறதோ அங்கு சென்று அவர் கட்சி தொடங்கட்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் வளசரவாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறுகையில் தைப் பூசத்திற்கும் தமிழ்நாடு உருவாகிய நாளைக்கும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும். எந்த நாட்டில் ரஜினிக்கு ஆதரவு இருக்கிறதோ அங்குச் சென்று அவரை கட்சி தொடங்க சொல்லுங்கள்.

பாஜக அழைத்ததா? என சொல்லமாட்டேன்.. அந்த கட்சியில் சேருவதற்கு பதில் தற்கொலை செய்வேன்: நாஞ்சில் சம்பத்பாஜக அழைத்ததா? என சொல்லமாட்டேன்.. அந்த கட்சியில் சேருவதற்கு பதில் தற்கொலை செய்வேன்: நாஞ்சில் சம்பத்

ஐயப்பன்

ஐயப்பன்

எனக்கும் தான் உலகம் முழுவதும் கட்சி உள்ளது. என் கட்சி இல்லாத நாடே இல்லை. அயோத்தியில் ராமர் வைத்து அரசியல் செய்தது போல, கேரளாவில் ஐயப்பனை அரசியல் செய்யலாம் என நினைத்தார்கள். ஆனால் அது தோற்றுவிட்டது.

இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து ஒரு மாதம் திசை திருப்ப வேல் யாத்திரை செல்லவுள்ளனர். பல்வேறு பிரச்சினைகளை மூடி மறைக்கவே இந்த வேல் யாத்திரையை நடத்துகின்றனர்.

தமிழகம்

தமிழகம்

வேலை வைத்து இவர்கள் நடத்தும் அரசியல் செல்லாது. வட இந்தியாவில் மதத்தை வைத்து அரசியல் செய்வது போல் தமிழகத்தில் அரசியல் செய்ய நினைக்கின்றனர். ஆனால் அதை நடத்த நாங்கள் விடமாட்டோம்.

எந்த கொள்கை

எந்த கொள்கை

வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும். பாகிஸ்தான், பக்கத்து நாடு, ஜெய் ஸ்ரீராம் கோஷம் இதை தவிர அவர்களுக்கு எந்த கொள்கையும் கோட்பாடும் இல்லை என தெரிவித்தார். வேல் யாத்திரைக்கு தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

English summary
Naam Tamilar Movement Seeman says that Rajinikanth may go some other country and can start political party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X