இஸ்லாமியர்களை சீண்டிய சீமான்! இங்கே பார்த்தா அன்வரை தூக்கிய எடப்பாடி! மொத்த சீனும் மாறுதே
சென்னை: அன்வர் ராஜா வருகை காரணமாக அதிமுகவின் இஸ்லாமியர்கள் வாக்கு வங்கி மீண்டும் புத்துணர்ச்சி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசியலில் சிறுபாண்மையினர் வாக்குகளை திராவிட கட்சிகளிடம் இருந்து பிரித்ததில் முக்கிய பங்காற்றிய கட்சி நாம் தமிழர். அதிமுக - திமுகவிற்கு மாறி மாறி வாக்களித்து வந்த இஸ்லாமியர்கள் பலர் நாம் தமிழர் பக்கம் மாறியதுதான் அரசியல் நிதர்சனம்.

சிறுபான்மையினர் வாக்குகள் மொத்தமாக நாம் தமிழருக்கு செல்லவில்லை என்றாலும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு நாம் தமிழர் வாக்கு வங்கியில் சிறுபாண்மையினரும் உள்ளனர். முக்கியமாக வெளிநாட்டில் இருக்கும் இஸ்லாமியர்கள் பலர் தீவிரமாக சீமான் ஆதரவு நிலைப்பாட்டையும் எடுத்துள்ளனர்.
முக்கியமாக அதிமுகவிற்கு ஆதரவாக இருந்த இஸ்லாமியர்கள் பலர் நாம் தமிழர் பக்கம் சென்றனர். அதிமுக - பாஜக கூட்டணியால் அதிமுகவை ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து மாறிய இஸ்லாமியர்களில் பலர் திமுகவிற்கும் , கணிசமானோர் நாம் தமிழர் பக்கமும் சென்றனர்.
இந்த இஸ்லாமியர்கள் வாக்குகளை இழந்துதான் அதிமுக இத்தனை காலம் திணறி வந்தது. ஆனால் இப்படிப்பட்ட இஸ்லாமியர்களின், கிறிஸ்துவர்கள் வாக்குகளுக்கு உலை வைக்கும் விதமாக, சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது போல சமீபத்தில் சீமான் பேசி இருந்தார்.
சீமான் பேச்சு: சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான், மணிப்பூரில் இருந்து வந்து நமக்கு யாரும் ஓட்டு போடப்போவதும் இல்லை. அதை பற்றி நாம் ஏன் பேச வேண்டும். இங்கு இருக்கக்கூடிய கிறிஸ்துவர்களும் நமக்காக வாக்களிக்கப்போவது கிடையாது. நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம், இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது, என்று கூறி இருந்தார்.

அதோடு நிற்காமல், சும்மா போய் தேவாலயத்தில் தேவரே வாரீர் வாரீர் என்று பாடிவிட்டு, கடைசியில் யார் யாருக்கோ நாட்டை கொடுத்து இருக்கிறார்கள். இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதி அக்கிரமங்களுக்கு பெரிய பொறுப்பு, என்றும் கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார். அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையான நிலையில் சீமானின் பேச்சுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் விமர்சனங்களை வைத்தன. அதேபோல் சில இஸ்லாமிய அமைப்புகள் சீமானுக்கு எதிராக காவல் நிலையத்திலும் புகார் வைத்தன.
பதிலடி: இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த சீமான், அநீதிக்கு எதிராக இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் என்றைக்காவது போராடியது உண்டா இஸ்லாமியர்களை அவமதித்ததாக கூறி நான் மன்னிப்பு கேட்டால் அவர்கள் எனக்கு ஓட்டு போடுவார்களா?; இஸ்லாமியர்களுக்காக எத்தனை போராட்டங்களில் நடிகர் ராஜ்கிரண் ஈடுபட்டுள்ளார்?"
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டால், அவர்கள் எனக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா? என்று சீமான் கேட்டு மீண்டும் விமர்சனம் வைத்துள்ளார். இதோடு நிற்காமல் சீமான் இன்று மீண்டும் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார் சீமான்.
என்ன சொன்னார்? : நான் சொன்ன கருத்து எதற்கும் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது. வருத்தம் தெரிவிக்க முடியாது. மதத்தை விட, ஜாதியை விட, இனத்தைவிட மொழிதான் முக்கியம். மொழி அடையாளம்தான் முக்கியம் . இதில் சிறுபான்மையினர் என்று எங்கு வந்தது.
இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் தமிழர்கள். அதனால் அவர்கள் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் கிடையாது. அவர்கள் பெரும்பான்மை தேசிய இனத்தை சேர்ந்தவர்கள். யார் சிறுபான்மையினர்.. என்று கூறிய சீமான் தனது காலை காட்டி "செருப்பை கழட்டி அடிப்பேன்" என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் வைத்தார்.
அதிமுக: இதனால் நாம் தமிழர்களின் இஸ்லாமியர்கள் வாக்கு வங்கி வெளியேறி திமுக, அதிமுக பக்கம் மீண்டும் செல்லுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் சரியாக அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து சேரலாம் என்ற அறிவிப்பை அடுத்து அதிமுகவில் இணைகிறார்.

அதிமுக மீது தற்போது சிறுபாண்மையினர், முக்கியமாக இஸ்லாமியர்கள் பெரிய அளவில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 17 சதவிகிதம் இஸ்லாமியர்கள் வாக்குகள் உள்ளன.
ஆனால் இந்த வாக்குகளில் பெரும்பாலானவை கடந்த லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் அதிமுகவிற்கு கிடைக்கவில்லை. திமுகவின் வெற்றிக்கும் இந்த வாக்குகள் முக்கிய காரணமாக இருந்தது. இதில் கணிசமான வாக்குகளை இத்தனை காலம் நாம் தமிழர் பிரித்து வந்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் இஸ்லாமியர்கள் அதிமுக மீதான நம்பிக்கையை இழந்து கொண்டே வந்தனர். இந்த நிலையில்தான் தற்போது நாம் தமிழர் கட்சி இஸ்லாமியர்களை விமர்சனம் செய்யவும், அன்வர் ராஜா அதிமுகவிற்கு திரும்பும் சரியாக உள்ளது.
இதனால் முன்பு நாம் தமிழர் பிரித்த இஸ்லாமியர்கள் வாக்குகளை அதிமுக மீண்டும் திரும்ப பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட்ட செங்கோட்டையன்.. 'நாளை பார்ப்பீர்கள்'.. அதிரடி பேட்டி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications