இதான் சீமான்.. ஆயிரம் சொல்லுங்க.. "ஒத்த" வார்த்தை.. மனசை அசால்ட்டாக அள்ளி.. உற்சாகத்தில் தம்பிகள்!
சீமானின் உத்தரவுபடி, நாம் தமிழர் கட்சியினர் தண்ணீர் தொட்டிகள் அமைக்கின்றனர்
சென்னை: ஒத்த வார்த்தைதான் சீமான் சொன்னார்.. அதற்கே நாம் தமிழர் கட்சியினர் காலில் சக்கரம் கட்டி சுழன்று வருகிறார்கள்.. "தம்பிகளின்" நற்செயல்களை கண்டு தமிழக மக்கள் பூரித்து போயுள்ளனர்.
வழக்கமாக சீமான் பேச்சு என்றாலே வித்தியாசமாக இருக்கும்.. நடைமுறை அரசியல் கட்சி தவைர்களின் பேச்சுக்கும் சீமான் பேச்சுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்..
சீமானின் பேச்சாக இருந்தாலும் சரி, பிரச்சாரமாக இருந்தாலும் சரி, அறிக்கையாக இருந்தாலும் சரி, அத்தனையும் மக்களுக்கும், மண்ணுக்குமான பிரச்சனையாக இருக்கும்..!

அறிக்கை
அந்த வகையில், கடந்த வாரம் சீமான் ஒரு அறிக்கையை தன்னுடைய கட்சியினருக்கு வெளியிட்டிருந்தார்.. இப்போது வெயில் காலம் தொடங்கிவிட்டது.. அக்னி நட்சத்திரம் வறுத்தெடுக்க ஆரம்பமாகிவிட்டது. கோடை வெப்பத்தால் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து மக்களுக்கு உதவ வேண்டும் என்று ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

தண்ணீர்
சீமானும் இப்படி ஒரு வேண்டுகோளை அந்த அறிக்கையில் வைத்திருந்தார்... ஆனால், ஒருபடி மேலே போய், மனிதர்களை தவிர, பறவைகளுக்கும் சேர்த்தும் தண்ணீர் வைக்க சொன்னார்.. "உறவுகள் அனைவரும் தங்கள் வீடுகளின் முகப்பில் அல்லது மாடியில் பறவைகளுக்கும், பிற சிற்றுயிர்களுக்கும் தண்ணீர்த்தொட்டி அமைத்து உயிர்நேயம் காக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ஜீவராசிகள்
சீமான் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டதுமே, தம்பிகள் அனைவரும் களத்தில் குதித்தனர்.. விலங்குகளுக்கும், பறவைகளுக்குமான தண்ணீர் தொட்டிகளை அதிகம் திறந்து வருகிறார்கள்.. இதுநாள் வரை மனிதர்களுக்கு மட்டுமே தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.. இப்போதுதான், ஜீவராசிகளுக்கான தண்ணீர் தொட்டிகள் தென்பட துவங்கி உள்ளன..

பாராட்டு
மொட்டை மாடிகளில் பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் அருந்தி கொண்டிருக்கின்றன.. மாடுகளும் ஆடுகளும் தண்ணீர் தொட்டிகளில் தண்ணீரை வயிறு நிரம்ப குடித்து விட்டு செல்கின்றன... இதை பார்த்து அந்தந்த பகுதி மக்கள் பூரித்து போய் உள்ளனர்.. ஆக, ஆயிரம் விமர்சனங்களை சீமான் மீது வைத்தாலும் சரி, மண்சார்ந்த, உயிர்கள் சார்ந்த பிரச்சனைகளை எப்போதும் முன்னெடுத்து வருவதால்தான், மக்களுடன் நெருங்கியே உள்ளனர் நாம் தமிழர் கட்சியினர்..!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications