பாசம் பொழிந்த பச்சோந்தி.. விஜய்க்கு எதிராக சீமானின் வெறிப்பேச்சு! சாக்கடையில் கால்.. விளாசிய பிரபலம்
சென்னை: முன்பெல்லாம் விஜய்யை தம்பி என அழைத்த நாம் தமிழர் கட்சியின் சீமான், அவர் தமிழக வெற்றி கழகத்தைத் தொடங்கியதும் கடுமையாக விமர்சித்து வருகிறார். தற்போது 'போடா வாடா' என ஒருமையில் பேசவும் தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் விஜய்யை சீமான் எவ்வளவு திட்டினாலும் அவரிடமிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை எனவும், சீமானின் வெறிப்பேச்சை விஜய் கண்டுகொள்ளவே கூடாது எனக் கூறியிருக்கிறார் பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன்.
2026 தேர்தலுக்கு தயாராகி வருகிறார் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய். பிரம்மாண்டமாக இரு மாநில மாநாடுகளையும் முடித்திருக்கிறார். இந்த நிலையில் களத்தில் வந்து மக்களை சந்திப்பதில்லை என்ற விமர்சனத்தைத் தவிடுபொடியாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் விஜய்.
நேற்று முன்தினம் திருச்சியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து விஜய்க்கு எதிராக திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பேசி வருகின்றன.

சீமான் விஜய்
மாநாட்டை விட பிரச்சாரத்தை பிரம்மாண்டமாக விஜய் ஏற்பாடு செய்திருப்பதாகவும், அவருக்கு வரும் கூட்டத்தைப் பார்த்து பிரதான கட்சிகளே மிரண்டு போயுள்ளதாகக் கூறுகின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர். மேலும், இதுவரை இல்லாத வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அமைச்சர்களும் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து விஜய் குறித்து பேசியதையும் கவனிக்க வேண்டும். அதைவிட நாம் தமிழர் கட்சியினர் தான் சமூக வலைதளங்களில் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நாம் தமிழர் சார்பு ஆதரவு யூட்யூப் சேனல்களிலும் விஜய் தொடர்பான விமர்சனங்களைத் தொடர்ந்து பார்க்க முடிகிறது.
நாம் தமிழர் கட்சி
எல்லாவற்றையும் விட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், கடந்த ஓராண்டாகவே விஜய் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் 'என் தம்பி விஜய் அரசியலுக்கு வரட்டும்' என பேசிய சீமான், விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு அவரை மிகக் கடுமையாகச் சாடி வருவது கவனிக்கத்தக்கது. இது ஒருபுறம் இருக்க, கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சீமான் சந்தித்துப் பேசினார்.
விஜய் அரசியல்
அதற்குப் பிறகு விஜயின் மீதான அட்டாக் அதிகமாகி இருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தில் ஆளும் திமுகவை விட, இன்னும் ஒரு தேர்தலைக்கூட சந்திக்காத விஜய்யை, சீமான் ஏன் இவ்வளவு காட்டமாக விமர்சிக்கிறார் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யை சீமான் எவ்வளவு திட்டினாலும் அவரிடமிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை எனவும், சீமானின் வெறிப்பேச்சை விஜய் கண்டுகொள்ளவே கூடாது எனக் கூறியிருக்கிறார் பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன்.
ப்ளூ சட்டை மாறன்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," விஜய்யை சீமான் எவ்வளவு திட்டினாலும்.. அவரிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. இப்போது வாடா, போடா என திட்டி வம்புக்கிழுக்க பார்க்கிறார். விஜய்யின் திமுக எதிர்ப்பை மடைமாற்றி.. தன்னை அவர் ஃபோகஸ் செய்ய வேண்டுமென நினைக்கிறார். இதுதான் இவருக்கு தரப்பட்டுள்ள அசைன்மென்ட். இந்த சாக்கடையில் கால் வைக்காமல்.. தொடர்ந்து இவரின் திட்டமிட்ட வெறிப்பேச்சை விஜய் கண்டுகொள்ளவே கூடாது. 15 வருடமாக கட்சி நடத்தி வரும் 60 வயது பெருசு.. தன்னை விட வயதில் குறைவாக இருப்பவரை, புதிதாக கட்சி ஆரம்பித்தவரை பார்த்து எப்படி வெறியாகிறது பாருங்கள்.
2026 தேர்தல்
விஜய் ஒரு தமிழன் அவர் என்னை ஆதரிக்காவிட்டாலும் அவருக்கு துணையாக நிற்பேன் என சில மாதங்களுக்கு முன்புவரை பாசம் பொழிந்த பச்சோந்தி.. தற்போது நிறம் மாறியுள்ளது. தமிழக அரசியலில் இருந்து முற்றிலும் அகற்றப்பட வேண்டிய அதிதீய சக்தி இது. 2026 தேர்தலில் தர்ம அடி தந்து மக்கள் புறந்தள்ளுவார்கள் என நம்புவோம். இக்கட்சியின் தொண்டர்கள்.. இனியும் இவரை நம்பாமல் உருப்பட்டு உயருங்கள்." என பதிவிட்டுள்ளார்.
-
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ











Click it and Unblock the Notifications