நாம் தமிழர் கட்சி திடீர் பல்டி! தென்காசி வேட்பாளரையே சீமான் அறிவிக்கவில்லையாம்- காரணம் பாஜக லிங்க்?
சென்னை: லோக்சபா தேர்தலில் தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கைலை ராஜன் அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் தற்போது தென்காசி தொகுதிக்கு சீமான் இன்னமும் வேட்பாளரே அறிவிக்கவில்லை என அக்கட்சி திடீரென பல்டி அடித்திருப்பது பரபரப்பையும் விவாதங்களையும் கிளப்பிவிட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. ஒவ்வொரு பகுதியாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்று கட்சியினருடன் ஆலோசனை நடத்தி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்.

இந்த வகையில் சீமான் தலைமையில் பாளையங்கோட்டையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருநெல்வேலி மற்றும் தென்காசி லோக்சபா தொகுதிக்கான வேட்பாளர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் நெல்லை தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா, தென்காசி தொகுதி வேட்பாளராக கயிலை ராஜன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி தமது எக்ஸ் பக்கத்தில், தென்காசி தொகுதி வேட்பாளர் மயிலை ராஜன் அல்ல. கைலை ராஜன். ஊடகங்கள் சரியாக திருத்தி வெளியிடவும் எனவும் அறிவுறுத்தி இருந்தார்.
தற்போது நாம் தமிழர் கட்சியின் ஐடி விங் மாநில தலைவர் சுனந்தா தாமரைச் செல்வன் தமது எக்ஸ் பக்கத்தில், தென்காசி லோக்சபா தொகுதி வேட்பாளரை முடிவு செய்து அறிவிக்கவில்லை என்று கூறியதுடன் கன்னியாகுமரி - திருமதி. மரிய ஜெனிபர் திருநெல்வேலி - திருமதி . சத்யா ஆகியோர் வேட்பாளர்கள் என தெரிவித்துள்ளார்.

ஆனால் தென்காசி தொகுதி வேட்பாளர் கைலை ராஜன் என நாம் தமிழர் கட்சியினர் ஏற்கனவே பிரசாரத்தையும் தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக நாம் விசாரித்த போது, சீமான் அறிவித்த தென்காசி தொகுதி வேட்பாளர் டாக்டர் கைலை ராஜன், பாஜகவில் தீவிரமாக செயல்பட்டவர். பாஜகவில் இருந்து நாம் தமிழர் கட்சிக்கு தாவியவர். பாஜகவில் தீவிர இந்துத்துவ சக்தியாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்தவர் டாக்டர் கைலை ராஜன். பாஜகவில் இருந்து வந்தவருக்கு சீமான் சீட் கொடுத்துவிட்டார் என்கிற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டதால் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஐடிவிங் தலைவர் சுனந்தா தாமரைச்செல்வன் கயிலை ராஜன் வேட்பாளரே இல்லை என பல்டி அடித்துவிட்டார் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications