சென்னை மாநகராட்சியை தலித்துகளுக்கான தனித் தொகுதியாக அறிவிக்க சீமான் வலியுறுத்தல்
சென்னை: சென்னை மாநகராட்சியை தலித்துகளுக்கான தொகுதியாக அறிவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்ட அறிக்கை:
உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிற சூழலில் அதற்கு முன்பாக ஆதித்தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய சென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவித்து ஆதித்தொல்குடி மக்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என்கிற கருத்தாக்கம் வலுப்பெற்று வருகிறது. அது மிக நியாயமானது; தார்மீகமானது. நாம் தமிழர் கட்சி அதனை முழுமையாக ஏற்று, வழிமொழிகிறது.

சென்னையின் பூர்வக்குடிகளே ஆதித்தமிழர்கள்தான்; சென்னை எனும் மாநகரமே ஆதித்தமிழ் மக்களுக்குச் சொந்தமானதுதான். அவர்கள் இன்றைக்கு மெல்ல மெல்ல நகரத்தின் தலைப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு அடிப்படை வசதிகளும், எவ்வித வாழ்வாதாரமுமற்ற கண்ணகி நகருக்கும், கல்லுக்குட்டைக்கும், செம்மஞ்சேரிக்கும் துரத்தியடிக்கப்பட்டு வலுகட்டாயமாகக் குடியமர்த்தப்படுகிறார்கள்.
வந்தாரை வாழ வைக்கும் இந்நிலத்தில் வந்தவர், போனவரெல்லாம் வசதியாக செம்மார்ந்த வாழ்க்கை வாழ்கிறபோது ஆதிக்குடிகள் சென்னையைவிட்டே அதிகாரத்தின் மூலம் விரட்டியடிக்கப்படுவது எதன்பொருட்டும் சகிக்க முடியாதப் பெருங்கொடுமையாகும். ஆகவே, அத்தகையப் பூர்வக்குடிகளுக்கானப் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டும் பொருட்டு சென்னையைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மேலும், உள்ளாட்சித் தேர்தலில் நேரடியாகத் தேர்வுசெய்யப்படாது மறைமுகத்தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் ஏறக்குறைய 14,000 துணைத்தலைவர் பதவிகளுக்கும் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசிற்குக் கோரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications