சனிகளில் எத்தனையோ விதம் இருக்கு.. எல்லா சனியின் மொத்த உருவம்தான் சீமான்.. ஜெயக்குமார் அட்டாக்!
சென்னை: சனிகளில் எத்தனையோ விதம் இருக்கிறது.. எல்லா சனியும் ஒன்று சேர்ந்த உருவம் தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை கொச்சையாக விமர்சிப்பதை சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், தவெக தலைவர் விஜய் தற்போது பிரச்சாரம் என்ற பெயரில் உப்புமா தான் கிண்டிக் கொண்டிருக்கிறார். திமுகவிடம் 2 இட்லி, அதிமுகவிடம் 2 தோசை என்று பிச்சுப்போட்டு உப்புமாவை கிண்டிக் கொண்டிருகிறார். இந்தப் பக்கம் எம்ஜிஆரையும், அந்தப் பக்கம் அண்ணாவையும் வைத்துள்ளார். இதில் என்ன மாற்றம் இருக்கிறது?

இது ஒரு சனியன், அது ஒரு சனியன் என்று இரண்டு சனியன்களை எடுத்து போட்டு சட்டையை போட்டிருக்கிறார். சனிக்கிழமை, சனிக்கிழமை கிளம்பிவிடுகிறார் என்று விமர்சித்தார். விஜய் மட்டுமல்லாமல் அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகிய இருவரையும் சனியன்கள் என்று விமர்சித்திருப்பது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பெரியாரையும் சீமான் கடுமையாக சாடி வருகிறார். தற்போது பெரியாருடன் சேர்த்து அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரையும் விமர்சிப்பது அதிமுகவை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த நிலையில் சிபா ஆதித்தனாரின் 121வது பிறந்தநாளையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.
அப்போது ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.. அதிமுக எப்போதும் நட்பை மதிக்கும்.. நட்புக்கு தலை வணங்குவோம்.. ஆனால் மறைந்த தலைவர்கள் குறித்து விமர்சிக்கும் போது, ஏற்கனவே பலரும் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்கள். ஏன் சீமானுக்கு அடிக்கடி இப்படி ஆகுகிறது என்று தெரியவில்லை.
சிலருக்கு நாக்கில் சனி இருக்கும்.. சிலருக்கு ஜென்ம சனி இருக்கும்.. சிலருக்கு அஷ்டம சனி இருக்கும்.. ஏழரை சனி கூட இருக்கும்.. இந்த மாதிரி சனிகளில் எத்தனையோ விதம் இருக்கு.. என்னால் சனியும் ஒன்றுசேர்ந்த உருவம் தான் சீமான்.. நண்பர் சீமானை பற்றி நல்ல அபிப்ராயம் இருக்கிறது. அவர் மறைந்த தலைவர்கள் பற்றி கொச்சையாக பேசினால், எங்களின் பதிலடி வேறு மாதிரி இருக்கும்.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை பற்றி சீமான் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவரைவிட கொச்சையாக பேசுவதற்கு அதிமுகவிலும் ஆட்கள் இருக்கிறார்கள். பேசவிட்டு எங்களாலும் சிரிக்க முடியும். ஆனால் மறைந்த தலைவர்களை இழிவுபடுத்துவது சீமானுக்கு நல்லதல்ல.. அதனை நண்பரான சீமானுக்கு சொல்லிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications