சீமான் அப்படி சொன்னதும்.. செய்தியாளர் சட்டென கேட்ட "அந்த" கேள்வி! என்ன பதில் சொன்னாருனு பாருங்க!
சென்னை: கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறித்து கூறி வரும் கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று அவர் பேட்டி கொடுக்கும் போது சட்டென செய்தியாளர் கேள்வி எழுப்பியதும், அதற்கு அவர் பதிலளித்த விதமும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
பெரியார் தொடங்கி, கம்யூனிஸ்ட், அம்பேத்கரிஸ்ட், திராவிடம் என தற்போது தமிழ்த்தேசிய கருத்துக்களை அதிகம் பேச தொடங்கியுள்ளார் சீமான். இந்நிலையில் மணிப்பூர் சம்பவம் குறித்து கடந்த 30ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் அவர் பேசிய கருத்துக்கள் பல பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. அதாவது,

"மணிப்பூர் விவகாரத்தை நாம் பேசுவதால், நமக்கு அங்குள்ள மக்கள் ஓட்டுப் போடப்போவதில்லை. இங்குள்ள கிறிஸ்தவர்களும் நமக்கு ஓட்டுப் போடப் போவதில்லை. நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இஸ்லாத்தையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆயிபோச்சு.
சும்மா தேவாலயத்திற்கு போய் தேவனே வாரீர்.. வாரீர்னு, பாடிட்டு, கடைசியா எவன் எவன்கிட்டையோ நாட்டை கொடுத்துவிட்டார்கள். இந்த நாட்டில் நடந்த அநீதிக்கு பெரிய பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள்தான். தொடர்ச்சியாக பல ஆண்டுகள் 18 சதவீதம் வாக்குகளை தி.மு.க.வுக்கும், காங்கிரஸிற்கும் போட்டு போட்டு நாட்டை தெருவில் போட்டவர்கள் இவர்கள் தான்.
சலிக்க முடியாத ஊழல், லஞ்சம், சீர்கேடான நிர்வாகம், காரணமே இவர்கள் தான். இவர்கள் பாவம் கேட்கிறார்கள். பெரும் பாவமே அவர்கள் தான், அவர்களுக்கு எப்படி மன்னிப்பு கிடைக்கும். இன்னும் பாருங்கள், இவர்கள் தான் எங்களை பாதுகாப்பார்கள் என்று நம்புகிறார்கள்.
இஸ்லாமியர்களுக்கு தி.மு.க தான் பாதுகாப்பு. ஆமாம், 20 வருஷமான வெளியேவே விடாம சிறைக்குள் வைத்திருப்பது எவ்வளவு பெரிய பாதுகாப்பு? மீண்டும் இதே இஸ்லாமியர்களிடம் அவர்கள் ஓட்டு கேட்பார்கள். இந்த முறையும் அதே பொய்யை சொல்லி ஓட்டு கேட்பார்கள். நீங்கள் அவர்களை விடுதலை செய்யுங்கள், நாம் தமிழர் கட்சியும் உங்களுக்கு வாக்களிக்கும்" என்று கூறியிருந்தார். சீமானின் இந்த கருத்துக்கு இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தன்னுடைய கருத்து குறித்து இன்று அவர் விளக்கமளித்திருந்தார். அதில், "நான் சொன்ன கருத்து எதற்கும் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது. வருத்தம் தெரிவிக்க முடியாது. மதத்தை விட, ஜாதியை விட, இனத்தைவிட மொழிதான் முக்கியம். மொழி அடையாளம்தான் முக்கியம் . இதில் சிறுபான்மையினர் என்று எங்கு வந்தது.
இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் தமிழர்கள். அதனால் அவர்கள் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் கிடையாது. அவர்கள் பெரும்பான்மை தேசிய இனத்தை சேர்ந்தவர்கள். யார் சிறுபான்மையினர்? 'செருப்பை கழட்டி அடிப்பேன்' என கடுமையாக பேசியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது சீமான் செருப்பை கழற்றி அடிப்பேன் என்று கூறியபோது, எதிரே இருந்த ரிப்போர்ட்டர் "என்னை சொல்றீங்களா? யாரை சொல்றீங்க?" என கேள்வியெழுப்பினார்.
உடனே சுதாரித்துக்கொண்ட சீமான், "உங்க.. சிறுபான்மை என சொல்பவரைதான் அப்படி சொல்றேன்" என்று கூறினார். இதனால் கூட்டத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications