செய்தியாளர் சந்திப்பில் திடீரென மயங்கி விழுந்த சீமான்.. பதறிய தொண்டர்கள்.. சிகிச்சைக்கு பிறகு நலம்
செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்த போதே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்தார்.
சென்னை: திருவொற்றியூரில் போராட்டம் நடத்தச் சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமுடன் வீடு திரும்பினார்.
Recommended Video
திருவொற்றியூரில் உள்ள அண்ணாமலை நகர் பகுதிகளில் வீடுகள் இடிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக சீமான் சென்றிருந்தார். கடுமையான வெயில் அடித்த நிலையில் வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் முழக்கமிட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் சீமான். நம்பிக்கையோடு இருங்கள். வீடுகளை இடித்துவிடுவார்கள் என்று பயப்பட வேண்டாம். கவலைப்படாமல் நம்பிக்கையோடு இருங்கள் என்று கூறினார். எந்த கட்டிடம் இடித்தாலும் நாம் வந்து போராடுவோம் என்று கூறினார்.
கடுமையான வெயில் அடிக்கிறது அதில் போராடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கூறினார் சீமான். ஓட்டுரிமை, குடிநீர், மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் திடீரென ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்க வருவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் தர வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தினார்.

சொத்து வரி உயர்வு
சொத்து வரி உயர்தப்பட்டது குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு அவர், அதற்குத்தானே நீங்கள் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறீர்கள் என்று கூறினார். எது நடக்கக் கூடாது என்று நினைத்தோமோ அது நடந்து விட்டது என்றும் கூறினார்.

பெண் கவுன்சிலர்களின் கணவர்கள்
சென்னையில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் ரவுடித்தனம் செய்வதாகவும், நான்தான் கவுன்சிலர் என்று அடாவடியில் ஈடுபடுவது பற்றியும் என்ன நினைக்கிறீர்கள் என்று சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான், இதற்கு நான் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டார். இந்த கொடுமை நடக்கக் கூடாது என்றுதான் போராடியதாக கூறினார். இனி ஒன்றும் செய்ய முடியாது என்றும் சீமான் கூறினார்.

இப்படித்தான் நடக்கும்
கவுன்சிலரின் கணவர் பணம் கேட்டு மிரட்டுவதைப் பார்க்கிறோம். இந்த ஆட்சியில் இப்படித்தான் நடக்கும் என்றும் கூறினார். இன்னும் நான்கு ஆண்டுகள் நீங்கள் சகித்துக்கொண்டுதான் இருந்தாக வேண்டும் என்றும் சீமான் தெரிவித்தார். ராஜ கண்ணப்பன் இலாகா மாற்றம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், இலாகா மாற்றி விட்டால் மட்டும் சரியாகி விடுமா என்று கேட்டார். அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

மயங்கி விழுந்த சீமான்
செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென சீமான் மயங்கி விழுந்தார். அங்கிருந்த நாம் தமிழர் கட்சித் தொண்டர்களும் செய்தியாளர்களும் பதற்றமடைந்தனர். உடனடியாக சீமானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் சீமான் வீடு திரும்பினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications