சீமானுக்கு ‘ரூட்’ போட்டுக் கொடுத்த 4 தலைகள்.. எடப்பாடிக்கு காத்திருக்கும் பெரிய சிக்கல்.. என்னவாம்?
4 பேர் சீமானுக்கு வழிவிட்டுச் சென்றிருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார் ரவீந்திரன் துரைசாமி.
சென்னை : நாம் தமிழர் கட்சி, மாற்று சக்தியாக உருவெடுப்பதற்கான வாய்ப்புகளை 4 தலைவர்கள் ஏற்படுத்தித் தந்துள்ளனர், 2024 தேர்தலில் வாக்கு சதவீதத்தில் சீமான் ஒரு பெரிய 'ஜம்ப்' செய்வார் என நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.
ஓ.பன்னீர்செல்வம் போலவே, சீமானும் எடப்பாடி பழனிசாமியின் வாக்குகளில் கை வைப்பார் என்கிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி. ஈரோடு கிழக்கில் அதற்கான சிக்னல்கள் தெரியுமாம்.
பாஜக - பாமக விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கணக்கு என்ன? பாஜக எடப்பாடி பழனிசாமியை எப்படி ஹேண்டில் செய்யும் என்பது பற்றியும் நம்முடன் விவாதித்துள்ளார் ரவீந்திரன் துரைசாமி. அவரது பேட்டி இனி..

ஜம்ப் செய்யும் சீமான்
கேள்வி : தென் மாவட்டங்களில் தனக்கு வாக்கு வங்கி சாதகமாக இல்லை, அதை ஓபிஎஸ் உடைப்பார் என்ற அபாயத்தை எடப்பாடி பழனிசாமி உணர்ந்திருக்கிறாரா?
ரவீந்திரன் துரைசாமி : சீமான் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். ஈர்ப்பு சக்தியில் எடப்பாடி பழனிசாமியை விட சீமானே முன்னே நிற்கிறார். எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வந்தவர்கள் எல்லாம் சீமான் பேச்சைக் கேட்கப் போய்விட்டார்கள். ஈபிஎஸ் காசு கொடுத்துத்தான் ஆள் கூட்ட வேண்டும், ஈர்ப்பு சக்தி இல்லாத தலைவர். கொங்கு மண்டலம் முழுக்க எடப்பாடி பழனிசாமியால் வெள்ளாள கவுண்டர் சமூகம் தாண்டி வேட்பாளரை நிறுத்த முடியாது. சீமான் எல்லா பகுதிகளிலும் எல்லா சமூக வேட்பாளர்களையும் நிறுத்துவார். ஒரு சதவீதம்.. 4 சதவீதம்.. 7 சதவீதம் என வளர்ந்த சீமான், சாதி சார்பற்ற பொதுத் தலைவராக 'ஜம்ப்' செய்து போவார். அரசியலில் வளர தன் சாதியை தியாகம் செய்ய சீமான் தயாராக இருக்கிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி சாதிக்குள்ளேயே நிற்கிறார்.

சீமானுக்கு லாபம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் பொறுத்தவரை சீமானுக்கு தான் லாபம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், கமல்ஹாசன் ஆகிய நான்கு பேரும் களத்தை விட்டு ஓடிவிட்டதால், 234 தொகுதிகளிலும் மாற்று சக்தி என்ற புள்ளி சீமானுக்கு கிடைத்திருக்கிறது. 4 பேரும் சீமானுக்கு வழிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்றுதான் என்று பேசி வருகிறார் சீமான். மாற்று சக்தி என்ற புள்ளியில் சீமானுக்கு ஆதரவு பெருகும். ஈரோடு கிழக்கில் பெறும் வாக்குகள் எல்லாம் பொருட்டே இல்லை.

நண்டு - நத்தை
ஓ.பன்னீர்செல்வம் ஒரு பக்கம் பாதிப்பை ஏற்படுத்தினால் சீமான் மறுபக்கம் ஓட்டைப் பிரிப்பார். எல்லாம் 2024ல் தான் தெரியவரும். பாஜகவும் எளிதில் போய்விட மாட்டார்கள். தங்களுக்கு சாதகமான விஷயங்களுக்காக டிமாண்ட் செய்வார்கள். திமுக கூட்டணி வலிமையாக இருக்கிறது. 3 சதவிகிதம் வாக்குகள் பெற்ற கமல்ஹாசனும் திமுக பக்கம் போய்விட்டார். எடப்பாடி பழனிசாமியால் வோட் கன்வெர்ட் செய்யமுடியாது என்று அன்புமணி ராமதாஸும் சென்றுவிட்டார். இப்படி பல அம்சங்கள் இருக்கின்றன. 2024ல் தான் உண்மையான நிலை தெரியவரும். பிணம், செடி, செத்தை, நண்டு, நத்தையெல்லாம் ஓடுகிற வெள்ளத்தில் ஓடும். நாங்கள் சமூக நீதிக்காக எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறக்கூடியவர்கள்.

மைனஸ் + மைனஸ்
கேள்வி : முன்பே, எடப்பாடி பழனிசாமி பாஜகவை ஏமாற்றி விடுவார், கூட்டணியில் இருந்து வெளியேறி விடுவார் எனக் கூறப்பட்டது. இப்போது தீர்ப்பு ஈபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்திருப்பதால், இனி பாஜகவை எளிதாக புறந்தள்ளும் வாய்ப்பு இருக்கிறதே..?
ரவீந்திரன் துரைசாமி : எடப்பாடி பழனிசாமி பாஜகவை ஏமாற்ற தயங்கமாட்டார். அவரைப் பொறுத்தவரை 3 சதவீத பாஜக வாக்குகளை விட 15 சதவீத இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் வாக்குகள் முக்கியம், சிவி சண்முகத்தின் கருத்துதான் எடப்பாடி பழனிசாமியின் கருத்து. அதேபோல, 5 சதவீத பாமக வாக்குகளுக்கு எதிராக 13 சதவீத பறையர் சமூக வாக்கு திருமாவளவன் மூலமாக திமுகவுக்கு செல்வதும் ஈபிஎஸ்ஸுக்கு தெரியும். இந்த 2 புள்ளிகளிலும், எடப்பாடி கணக்கு போடுகிறார். பாஜக மைனஸ், பாமக மைனஸ் என்பதுதான் எடப்பாடியின் கருத்து. பாஜக மத்தியில் ஆள்வதால் நிதானித்து பேசுகிறாரே தவிர அவரது உள்ளக்கிடக்கை என்பது சி.வி.சண்முகத்தின் கருத்துதான்.

பாஜக 50-50
கேள்வி : பாஜக, இனி எடப்பாடி பழனிசாமியை எப்படி ஹேண்டில் செய்யும்?
ரவீந்திரன் துரைசாமி : பிரதமர் மோடியைப் பொறுத்தரவை தமிழ்நாட்டில் பெரிய முக்கியத்துவத்தைப் பெறும் தலைவர் ஸ்டாலின் தான். ஓபிஎஸ் + ஈபிஎஸ் இருவரும் இணைந்தும் கூட எம்.பி தேர்தலில் பாஜகவுக்கு ஒரு சீட்டையும் கன்வெர்ட் செய்து கொடுக்க முடியவில்லை. அதனால் தான் இருவரையும் 50-50 என மோடி மதிக்கிறார். நிஜம் என்னவென்று 2024 மக்களவைத் தேர்தலில் தான் தெரியும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை. அதற்கு எந்த மதிப்பும் கிடையாது. ஈபிஎஸ் எவ்வளவு எடுக்கிறார், ஓபிஎஸ் எவ்வளவு பெறுகிறார், சீமான் எவ்வளவு ஜம்ப் ஆகிறார் என்பதெல்லாம் 2024ல் தான் தெரியும் என ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications