சீமான் அதிர்ச்சி-நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் விலகல்- ஜாதி படுகொலைகள்..பகீர் குற்றச்சாட்டுகள்!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் தாம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக இன்று திடீரென அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சியின் லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. லோக்சபா தேர்தல் செலவுக்காக திரள் நிதி திரட்டி வருகிறது நாம் தமிழர் கட்சி.

நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்த மூத்த நிர்வாகிகள் குறிப்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அடுத்த நிலையில் இருந்த மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொருவராக அக்கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராஜா அம்மையப்பன் வெளியிட்ட அறிக்கையில், கட்சிக்குள் நடக்கும் சில விஷயங்களும், சாதி பிரிவினைகளும், சமூகப் படுகொலையையும் கண்டு என்னால் பயணிக்க விருப்பமில்லை. பொதுக்குழு என்ற பெயரில் வெற்று பக்கங்களில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட தொகுதி செயலாளர்களிடம் கையெழுத்து வாங்குவது, நான் பயணிக்கும் கட்சியில் யார் செயலாளர், யார் பொருளாளர் என்பதை அறியாமலும் வெளிப்படுத்தாமலும் பயணிக்க விரும்பவில்லை. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளரான எனக்கே தெரியாமல், கட்சியின் பொதுச்செயலாளர் என்று கூறப்படும் கருப்பையா என்பவர் யார்? கட்சிக்கு என்ன செய்தார்? நீங்கள் நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் பற்றி எல்லாம் உங்களுக்குத் தெரியுமா? வேட்பாளர்கள் சிலரைத் தவிர பலபேரை எப்போதாவது களத்தில் பார்த்து உள்ளீர்களா? கட்சிக்குள் ஜாதி இல்லாமல் செயல்பட முடியுமா? என்ற கேள்விக்கு விடைகள் கிடைக்காமல் சில நாட்களாக தவித்து வருகிறேன். பாரதிமோகன், திருமால் செல்வன் போன்றோர் கட்சியின் பொருளாளர் ஆகவும் துணை செயலாளர் ஆகவும் நியமித்ததாக கூறப்படுவது உங்களுக்கு எல்லாம் தெரியுமா? கட்சியில் அண்ணன் விருப்பப்படி செயல்பாடுகள் உள்ளனவா? அண்ணன் அருகில் உள்ள 3 பேரை தவிர்த்து நீங்கள் அண்ணனை சகஜமாக பார்க்க முடிகிறதா? என்பதை அறிந்து கொள்ளுங்கள் என குமுறி உள்ளார் ராஜா அம்மையப்பன்.

-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications