நாதக தம்பிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. விவசாயி சின்னத்தை தட்டித் தூக்கிய சீமான்! மீசை தான் ஹைலைட்!
சென்னை: கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.22% வாக்கு சதவீதத்தை பெற்றதை அடுத்து, சீமானின் நாம் தமிழர் கட்சியை தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக கடந்த ஜனவரி மதம் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், ஏர் கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னத்தை நாதகவின் சின்னமாக ஒதுக்கி அறிவித்துள்ளது. முன்னதாக கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டு பின்னர் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டு தேர்தலை சந்தித்த பிரதான அரசியல் கட்சிகளில் இதுவரை கூட்டணி அமைத்துப் போட்டியிடாத கட்சி என்றால் நாம் தமிழர் கட்சி மட்டும் தான். திமுக - அதிமுக மட்டுமே தங்களுக்குள் கூட்டணி அமைக்காமல், அனைத்து பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளன.
இதற்கு தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அப்படி தமிழக இளைஞர்களிடையே மாற்று சக்தி என்ற மாபெரும் முழக்கத்தோடு வந்த நாம் தமிழர் கட்சிக்கும் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

திரைத்துறையிலிருந்து ஈழத் தமிழ் விவகாரம், தமிழ் தேசியம் போன்ற முழக்கங்களோடு அரசியலில் குறித்த சீமானுக்கு மெல்ல மெல்ல இளைஞர்களிடையே ஆதரவு பெருகியது. திராவிட கட்சி கொள்கைகளில் வேறுபாடு கொண்டவர்கள் சீமானின் பின்னால் அணி திரள தொடங்கினர். ஆரம்பத்தில் காங்கிரஸ் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்த சீமான் இடையே பாஜக அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்திருக்கிறார்.
அதே நேரத்தில் ஆண்டு சீமானின் பேச்சுகளில் மாற்றம் நிகழத் தொடங்கியது, தேர்தல் அரசியலில் சீமானுக்கு பின்னால் அணி திரள தொடங்கியவர்களில் பல முக்கிய நிர்வாகிகள் தற்போது தனியே சென்று விட்டனர். காரணம், ஏற்கனவே சொன்னது போல ஆண்டுகாண்டு சீமானின் செயல்பாடுகளிலும் பேச்சுகளிலும் ஏற்பட்ட மாற்றம் தான். ஆரம்பத்தில் பெரியாரை உயர்த்தி பிடித்த சீமான் பின்னர் அவரை தரம் தாழ்ந்து பேசத் தொடங்கினார்.
இடையிடையே ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், அறிக்கை என சீமான் அரசியல் செய்த நிலையில்,
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று டெல்லியில் இருந்து கிடைத்து இருக்கிறது. கடந்த நாம் தமிழர் கட்சியை மாநில கட்சியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளைப் பெற்றதை அடுத்து அந்த அங்கீகாரத்தை கொடுத்தது.
இதை அடுத்து கட்சிக்கு சின்னத்தைப் பெற நாம் தமிழர் கட்சி சீமான், தீவிரமாக காய் நகர்த்தி வந்த நிலையில் தற்போது ஏர் கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு இருப்பதை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு உறுதி செய்து இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதன் காரணமாக வருகின்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஏற் கலப்பையுடன் கூடிய விவசாய சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சின்னத்தை வரைந்து கொடுத்து சீமான் அங்கீகாரம் பெற்று இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. காரணம், நாம் தமிழர் கட்சி கேட்டிருந்த புலி சின்னத்தை தர முடியாது எனவும், தேர்தல் ஆணைய வெப்சைட்டில் உள்ள ஏதாவது ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்து அனுப்புமாறு கேட்டுக் கொண்ட நிலையில், ஏர்கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னத்தை வரைந்து கொடுத்து சீமான் அங்கீகாரம் பெற்றுள்ளார்.குறிப்பாக சின்னத்தில் இருக்கும் விவசாயி சீமானை மாதிரியாக கொண்டு, அவரது ஹேர் ஸ்டைல், மீசை உள்ளிட்டவற்றை அப்படியே பிரதிபலிப்பது போல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications