கிளாம்பாக்கம்தான்.. ஆம்னி பேருந்துகளுக்கு வேறு சாய்ஸ் இல்லை.. செக் வைத்த சேகர்பாபு
சென்னை: ஆம்னி பேருந்துகளை இன்று முதல் கிளாம்பாக்கத்திருந்து இயக்க வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ள நிலையில், அங்கிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க தேவையான உதவிகளை செய்ய தயார் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு வரும் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே சென்னை பெருநகரத்தின் மக்கள் தொகை 1 கோடியை கடந்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்டங்களிலிருந்து வருகின்றனர். அதேபோல விழா நாட்களில், பண்டிகை தினங்களில் இம்மக்கள் பெரிய அளவில் சொந்த ஊரை நோக்கி படையெடுக்கின்றனர்.

ஆனால் இவர்களுக்கான முறையான போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. தாம்பரம், திருவான்மியூர் போன்ற புறநகர் பகுதிகளில் தென் மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அவை குறைந்த எண்ணிக்கையில்தான் இயக்கப்படுகின்றன. எப்படி இருந்தாலும் கோயம்பேடு வந்தால்தான் பஸ் கிடைக்கும் என்கிற சூழல் இருக்கிறது. அப்படியே கோயம்பேடு வந்து பஸ் புடிச்சாலும் பெருங்களத்தூரை தாண்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.
இந்த பிரச்னையை சமாளிக்கதான் வண்டலூரையடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தை கட்டுவது என்று கடந்த அதிமுக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி 88 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ரூ.400 கோடியில் கடந்த 2019ம் ஆண்டு பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இவை முடியும்போது திட்டமிட்டதைவிட கூடுதலாக 25 சதவிகிதம் செலவை இழுத்தன. இருப்பினும் ஒரு வழியாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி அது பயன்பாட்டுக்கு வந்தது.
இப்பேருந்து முனையத்தில் 2,000க்கும் அதிகமான பேருந்துகள் வரை வந்து செல்லும், இது தவிர 270 கார்கள், 3,500 பைக்குகள் பார்க் செய்துகொள்ளலாம். முதற்கட்டமாக தென் மாவட்டங்களுக்கு அதிக அளவிலும், மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு குறைவான அளவில் பேருந்துகளும் இயக்கப்படும். அதன் பின்னர் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேபோல ஆம்னி பேருந்துகள் இங்கிருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்லும் பயணிகள், கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்துதான் டிக்கெட்களை புக் செய்திருக்கிறார்கள் என்றும், எனவே பொங்கல் முடியும் வரை கோயம்பேடு முனையத்திலிருந்து பேருந்துகளை இயக்கிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கோரியிருந்தனர். இதனையடுத்து ஜனவரி 24ம் தேதி வரை கோயம்பேடு முனையத்திலிருந்து தனியார் பேருந்துகளை இயக்க அரசு அனுமதித்தது.
இந்த கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக கூறியுள்ளார். அதற்கேற்ப ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் நோக்கி திருப்பிவிடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், "கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க உரிமையாளர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய தயார்" என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மேலும், "பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்த வசதி இல்லை என்ற கூற்று தவறு. ஒரே நேரத்தில் 5 நடைமேடைகளில் 77 ஆம்னி பேருந்துகளை இயக்க வசதி உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மேலும் 170 பேருந்துகள் நிறுத்தும் அளவுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றும் கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications