பாமகவிலேயே வெட்டு குத்து நடக்குது! இதுல படுத்துகிட்டே 50 தொகுதியில் வெற்றியா? சேகர்பாபு தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமகவுக்குள் இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்துவிட்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி தோல்வி குறித்து கருத்து சொல்லட்டும் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு காட்டமாக விமர்சித்துள்ளார்.

ramadoss

சென்னையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருவிக நகர், வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் அமுத கரங்கள் நிகழ்ச்சிக்கு முன்பாக, அப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் குறைகளை கேட்கும் நிகழ்வை தொடங்கியிருக்கிறோம்.

ஏற்கெனவே மேயர் தலைமையில் மக்களைத் தேடி மாநகராட்சி என்ற பெயரில் இது போன்ற ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இது போன்ற செயல்பாட்டை இன்று முதல் தொடங்கியிருக்கிறோம்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் கொடுத்து 2, 3 நாட்களாகியும் அப்போதைய அதிமுக அரசு புகாரை ஏற்கவில்லை. அதன் பின்னர் திமுக தலையிட்டு கொடுக்கப்பட்ட தொடர் அழுத்தம், ஆர்ப்பட்டம், போராட்டம், சட்டசபையில் அந்த பிரச்சினை தொடர்பாக பேசியதால் வேறு வழியில்லாமல் அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றினார்.

தண்டனை

இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை இனி, வரும் காலங்களில் இது போன்று பாலியல் குற்றங்களில் நடைபெறுவோருக்கு ஒரு பாடமாக அமையும். இந்த வழக்கை வெளிக் கொண்டு வர முழுக்க முழுக்க அழுத்தம் கொடுத்த தமிழக முதல்வரை மகளிர் பாராட்டி வருகிறார்கள்.

வயிற்றெரிச்சல்

அந்த வயிற்றெரிச்சல் காரணமாகத்தான் எதிர்க்கட்சித் தலைவர் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். நீலகிரி சென்று முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்கவில்லை. தினமும் அங்கு மக்கள் பணிகளைத்தான் செய்கிறார். பள்ளி, மருத்துவமனைகளில் ஆய்வு, யானைகள் முகாமில் ஆய்வு, யானைப் பாகன்களுக்கான வீடுகளைத் திறந்து வைத்துள்ளார்.

தமிழக முதல்வர்

தமிழக முதல்வரைப் பொருத்தவரை ஓய்வு என்பதே கிடையாது என்றார். அப்போது ராமதாஸ் படுத்து கொண்டே 50 தொகுதிகளில் வெல்லும் வித்தையை நான் கற்றுக் கொடுத்துள்ளதாக கூறயிருக்கிறாரே என கேட்ட போது, சேகர்பாபு கூறுகையில் அனைவருமே அரசியல் ரீதியாக கூறுவதைதான் அவரும் கூறியுள்ளார்.

கட்சிக்குள் பிரச்சினை

முதலில் அவர்களது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு அதன் பிறகு வெற்றி தோல்வி குறித்து கருத்து சொல்ல வேண்டும். அவர்களுடைய குடும்பத்துக்குள்ளேயே வெட்டு, குத்து நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் எப்படி 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெற்றி பெற முடியும்?

மக்களின் மீது நாட்டமில்லை

மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களின் மீது நாட்டமில்லாதவர்கள், மக்களைப் பற்றி கவலைப்படாதவர்கள் இவ்வாறு கூறுவார்கள். மக்களை நாடிச் செல்பவர்கள்தான் உண்மையாக மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியும்.

மக்கள் சேவகர்கள்

மக்கள் சேவகர்களாக இருக்க முடியும். எனவே அந்த கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என சேகர்பாபு கூறியிருந்தார். பாமக இளைஞரணித் தலைவராக பேரன் முகுந்தனை, ராமதாஸ் நியமித்த போது அன்புமணி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

அன்புமணி சூசகம்

அப்போது ராமதாஸ், இது என் கட்சி, விருப்பமில்லாதவர்கள் வெளியே போகலாம் என அன்புமணியை சூசகமாக தெரிவித்தார். இதனால் கோபமடைந்த அன்புமணி, தன்னை பார்க்க விரும்புவோர் சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் பார்க்கலாம் என சொல்லிவிட்டு புறப்பட்டார்.

தந்தை- மகன்

அன்று முதல் தந்தை- மகனுக்கு இடையே சுமூக உடன்பாடு இல்லை என சொல்லப்படுகிறது. நேற்று முன் தினம் தைலாபுரத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி கலந்து கொள்ளவில்லை.

ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பு

அந்த கூட்டம் முடித்துக் கொண்டு ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:படுத்துக் கொண்டே 50 தொகுதிகளில் எப்படி வெல்வது என்ற வித்தையை நான் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். இந்த கூட்டத்திற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பாமகவில் கோஷ்டி இல்லை

அவர் வரலாம், வந்து கொண்டிருக்கலாம். பாமகவுக்குள் எந்த கோஷ்டியும் இல்லை. நான் யாரையும் கட்சியிலிருந்து நீக்க மாட்டேன். அவர்களாகவே உடல்நிலை சரியில்லை, தனிப்பட்ட காரணம் என சொல்லி கட்சியை விட்டு விலகினால் நான் தடுக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+