திமுக எம்எல்ஏவை வளைத்த கும்பல்.. காரை எடுத்துக்கொண்டு.. நேரில் களமிறங்கிய சேகர் பாபு! பரபர சம்பவம்
சென்னை; சென்னை புது வண்ணாரப்பேட்டையில் திமுக எம்எல்ஏவை அதிமுக நிர்வாகிகள் சிலர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பெரிய அசம்பாவிதங்கள் இன்றி தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற்றது.
நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாட்டில் 60.70 % வாக்குகள் பதிவாகி உள்ளது. மாநகராட்சிகளில் அதிகபட்சமாக கரூரில் 75.84% வாக்குகள் பதிவாகி உள்ளன. சென்னை மாநகராட்சியில் குறைந்தபட்சமாக 43.59% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

என்ன
நேற்று தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற்றாலும் சில இடங்களில் சர்ச்சைகள், பிரச்சனைகள் ஏற்பட்டன. புதுக்கோட்டையில் அதிமுக - திமுக நிர்வாகிகள் இடையே சிறிய மோதல் ஏற்பட்டது. அதேபோல் மதுரை மேலூரில் பாஜக முகவர் கிரிராஜன் இஸ்லாமிய வாக்காளர் ஒருவரை ஹிஜாப் அணிந்து வந்து வாக்களிக்க கூடாது என்று கூறி பிரச்சனை செய்தார். இந்த நிலையில் கிரிராஜன் தற்போது மேலூர் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

புதுவண்ணாரப்பேட்டை
இந்த நிலையில்தான் நேற்று புதுவண்ணாரப்பேட்டையில் மாலையில் திடீரென மோதல் ஏற்பட்டது. அங்கு இருக்கும் வார்டு என 38, 39ல் இந்த மோதல் நடைபெற்றது. அதிமுக, திமுக பூத் ஏஜெண்டுகள் அங்கு நின்று பேசிக்கொண்டு இருக்கும் போது பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் சண்டையில் முடிந்து, சாலையில் குதித்து இரண்டு தரப்பினரும் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர்.

எம்எல்ஏ
இந்த தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மோதலில் ஈடுப்பட்ட கும்பலை அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் சண்டை அறிந்து ஆர் கே நகர் தொகுதியை சேர்ந்த திமுக எம்எல்ஏ எபினேசர் அங்கு சென்றார். அப்போது அவரின் காரை சுற்றி வளைத்த அதிமுகவினர், அவரை நகர விடாமல் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சுற்றி வளைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

தாக்குதல்
அதோடு எபினேசர் காரை அதிமுகவினர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தகவல் அறிந்த அமைச்சர் சேகர் பாபு உடனடியாக காரை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு வந்தார். எதனால் மோதல் ஏற்பட்டது, எம்எல்ஏ காரை தாக்கும் அளவிற்கு என்ன பிரச்சனை என்று விசாரித்தார். அங்கு இருந்த திமுக, அதிமுக நிர்வாகிகளிடம் என்ன பிரச்சனை என்று சேகர் பாபு தீவிரமாக விசாரித்தார்.
Recommended Video

போலீசார்
அதோடு அங்கு இருந்த போலீசாரிடம் மோதல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். போலீஸ் எண்ணிக்கையை இங்கே அதிகரியுங்கள் என்று அறிவுரை வழங்கிவிட்டு சென்றார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சேகர் பாபு, அதிமுக தமிழ்நாடு முழுக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைய போகிறது. சென்னையிலும் திமுகதான் வெல்லும். தோல்வி பயம் காரணமாக அதிமுக இப்படி வன்முறையில் இறங்கி உள்ளது என்று குறிப்பிட்டார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications