எல்லாம் சரி.. சுய சான்றிதழ் கட்டிட அனுமதி சூப்பர்.. ஆனால் பார்க்கிங் எங்கே? தமிழக அரசுக்கு கோரிக்கை
சென்னை: தமிழகத்தில், 2,500 சதுர அடி மனையில், 3,500 சதுர அடி பரப்பளவுக்கு வீடுகள் கட்ட, சுய சான்று அடிப்படையில் கட்டட அனுமதி வழங்கப்படும் நிலையில், முக்கிய கோரிக்கை ஒன்று, தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
சுய சான்றிதழ் கட்டிட அனுமதியை, இ-சேவை மையங்களில் வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு கையிலெடுத்துள்ளது. காரணம், சுயசான்றிதழ் கட்டிட அனுமதிக்காக, யாருக்கும் ஒரு பைசாகூட தராமல், பொதுமக்களே எளிதாக கட்டிட அனுமதி பெற வேண்டும் என்பதற்காகவே, தமிழக அரசு இந்த அதிரடியை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, 2,500 சதுரடி கொண்ட மனையில், 3,500 சதுரடி வரையிலான தரைதளம் அல்லது தரைதளம் மற்றும் முதல் தளம் கொண்ட 2 குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுய சான்றிதழ் முறையில் உடனடி கட்டட அனுமதி வழங்கப்படும்.
லஞ்சம் ஊழல் இல்லை: எனவே, இது தொடர்பாக https://onlineppa.tn.gov.in/SWP-web/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்குள் சென்று விண்ணப்பித்து கொள்ளலாம். இதனால், யாருக்குமே லஞ்சம் தர தேவையில்லை.. நேரடியாகவே விண்ணப்பித்து, எளிதாக கட்டிட அனுமதி பெற பொதுமக்களால் பெற்றுக் முடியும். இதற்கு குறிப்பிட்ட சில அடிப்படை ஆவணங்கள், வரைபடங்களை தாக்கல் செய்தால் போதும்..
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "கட்டிட அனுமதிக்கு விண்ணப்பம் செய்வோரில் பெரும்பாலானோர் 3,500 சதுரடிக்குள் கட்டி வருபவர்கள் என்பதால், அந்த அளவைத்தேர்வு செய்து சுய சான்றிதழ் முறையில் அனுமதி தரப்படுகிறது. ஆனாலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக 20,000 ரூபாயில் இருந்து ரூ.50,000 வரை கேட்பதாக புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தன. எனவேதான், இ-சேவை மையங்கள் மூலம் கட்டட அனுமதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுகுறித்த முறையாக அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்கிறார்கள்.
திட்டங்கள்: எனினும், இந்த திட்டத்தில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.. குறிப்பாக, சுயசான்று முறையில் அனுமதி பெறப்படும் கட்டடங்களில், வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான வழிமுறைகள் தெளிவாக இல்லை என்கிறார்கள்..
இதுகுறித்து, இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு சொல்லும்போது, "சுயசான்று முறையில் மக்கள் வீடு கட்ட எளிதாக, அனுமதி பெற முடிகிறது. ஆனால், பொது கட்டட விதிகளின் அடிப்படையில், 750 சதுர அடிக்கு ஒரு கார் நிறுத்துமிடம் ஒதுக்க வேண்டும்.
இடவசதி வேண்டும்: சுயசான்று முறையில் வழங்கப்படும் கட்டட அனுமதியில், FSI எனப்படும் தளப்பரப்பு குறியீட்டுக்குள் ஒரு பகுதியாக வாகன நிறுத்துமிடம் கணக்கிடப்படுகிறது. பிற கட்டடங்களுக்கு வழங்கப்படுவது போலவே, இதற்கும் தனியான வசதியாக வாகன நிறுத்துமிடங்களை அனுமதித்தால், பயன்பாட்டுக்கான இடவசதி மேலும் அதிகரிக்கும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications