இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிற தமிழகம்..ஆளுநரின் அதிகார மமதை! செல்வப் பெருந்தகை காட்டம்!
சென்னை: கல்வித்துறையில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிற தமிழகத்தின் பாடத் திட்டத்தை தரம் குறைந்தது என்று பேசுவது ஆளுநரின் அதிகார மமதையையே காட்டுகிறது. இத்தகைய தமிழக விரோத பேச்சை ஆளுநர் ஆர்.என். ரவி உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தேசிய பாட திட்டத்தை ஒப்பிடும் போது மாநில பாடதிட்டத்தின் தரம் குறைவாக உள்ளதென தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒரு பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பேசும் போது குற்றம் சாட்டியிருக்கிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் கொள்கைகளுக்கும், திட்டங்களுக்கும் எதிராக செயல்படுவதை நாள்தோறும் ஒரு வேலையாகவே ஆளுநர் செய்து வருகிறார். தமிழக அமைச்சரவையின்
அறிவுரை மற்றும் ஆலோசனை இல்லாமல் எதுவும் செய்ய இயலாது என அரசமைப்புச் சட்டமும், உச்சநீதிமன்றமும் தெளிவாக கூறிய பிறகு எதேச்சதிகாரமாக தமிழக அரசுக்கு விரோதமாக தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக கருத்துகளை கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒன்றிய பா.ஜ.க. அரசு 2020 இல் அறிமுகப்படுத்திய புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததோடு, தமிழ்நாடு அரசுக்கென கல்விக் கொள்கை வகுக்க நீதியரசர் முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு வரைவு அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து பேசுவது எவ்வகையிலும் ஏற்கக் கூடியதல்ல. புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை உதாசீனப்படுத்துகிற வகையில் ஆளுநரின் கருத்து அமைந்திருக்கிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பாடத் திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்பட்டதால் தமிழக அரசு பள்ளிகளில் படிக்கிற லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்படுவதாக கூறி தான் நீட் தேர்வை தமிழக அரசு எதிர்த்து வருகிறது. சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அதற்கு ஒப்புதல் தராமல் முடக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வினால் அனிதா உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பாதிப்புக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டுள்ள கொடுமையான நிகழ்வு ஏற்பட்டது.
2024-25 கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் செயல்படுத்த தமிழ்நாட்டுக்கு ரூபாய் 3586 கோடி நிதிநிலையில் ஒதுக்கப்பட்டது. இந்த தொகையில் ஒன்றிய அரசின் 60 சதவிகித பங்களிப்பான ரூபாய் 2152 கோடியை ஜூன் மாதம் விடுவித்திருக்க வேண்டும். ஆனால், செப்டம்பர் மாதம் தொடங்கிய பிறகும் இதுவரை விடுவிக்காமல் 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில் தமிழக கல்வித்துறை இருப்பது குறித்து ஆளுநர் வாய்மூடி மௌனியாக இருப்பது ஏன் ?
தமிழக மாணவர்கள் மீது உண்மையிலேயே ஆளுநருக்கு அக்கறை இருக்குமேயானால் ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டிய தொகையை விடுவிக்கும் முயற்சியில் ஏன் ஈடுபடவில்லை ? ஏதோவொரு வகையில் தமிழக அரசை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசுக்கு துணை போகிற ஆளுநர் தமிழக பாடத்திட்டத்தைப் பற்றி பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது ?
இந்நிலையில் மத்திய பாட திட்டத்திற்கு ஆதரவாகவும், மாநில பாட திட்டத்தை தரம் குறைந்தது என்று பேசுவது ஆளுநரின் அராஜக போக்கையே காட்டுகிறது. ஆர்.என். ரவி தமிழகத்தின் ஆளுநரா அல்லது பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளரா என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, கல்வித்துறையில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிற தமிழகத்தின் பாடத் திட்டத்தை தரம் குறைந்தது என்று பேசுவது ஆளுநரின் அதிகார மமதையையே காட்டுகிறது. இத்தகைய தமிழக விரோத பேச்சை ஆளுநர் ஆர்.என். ரவி உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென எச்சரிக்கிறேன்." என கூறியுள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications