செல்வமகள் சேமிப்பு திட்டம் டூ வருமான வரி வரை.. மே 1.. நாளை முதல் மாறப்போகும் முக்கிய விஷயங்கள்!
சென்னை: மே 1ம் தேதி நாளை தொடங்கும் நிலையில் பல முக்கியமான மாற்றங்கள், அறிவிப்புகள் மே மாதத்தில் செயலுக்கு வர உள்ளது.
வருமான வரி ஐடிஆர்:
ஏப்ரல் 28, 2025 நிலவரப்படி, 2024-25 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2025-26) வருமான வரி அறிக்கை (ITR) படிவங்களை வருமான வரித் துறை இன்னும் வெளியிடவில்லை. இதனால் வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி நாள் தள்ளிப்போகலாம் என்கிறார்கள். மே மாதம் ஐடிஆர் படிவங்கள் கண்டிப்பாக திறக்கப்படும். பொதுவாக ஜூலை 31ம் தேதி வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். ஆனால் இந்த ஜூலை 31ம் தேதி இந்த முறை தள்ளிப்போகும் வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால்.. இன்னும் 2024-25 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2025-26) வருமான வரி அறிக்கை (ITR) படிவங்களை வருமான வரித் துறை இன்னும் வெளியிடவில்லை.
ஏற்கனவே 1 மாதம் சென்றுவிட்டது. இனி மக்கள் அவசர அவசரமாக தாக்கல் செய்தாலும் பல லட்சம் பேர் தாக்கல் செய்யாமல் போகலாம். இந்த தாமதம் வரி செலுத்துவோர் மற்றும் தொழில் வல்லுநர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. முக்கியமாக இந்த ஆண்டுக்கான கொள்கைகள் மற்றும் வரி regimeகள் ஏற்கனவே பட்ஜெட் மூலம் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டும் கூட இன்னும் அறிக்கை வெளியிடப்படவில்லை. இதற்கு பின் சில காரணங்கள் உள்ளன.

31 ஜூலை 2025 - தணிக்கை தேவையில்லாத தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்.
31 அக்டோபர் 2025 - தணிக்கை தேவைப்படும் வணிகங்கள் அல்லது நிபுணர்கள் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்.
30 நவம்பர் 2025 - தணிக்கை தேவைப்படும் மற்றும் TP (பரிமாற்ற விலை) விதிகளுக்கு உட்பட்ட நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்.
அரசின் தாமதம் காரணமாக மேற்கண்ட காலக்கெடு நீட்டிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.வருமான வரி பக்கம் திறக்கப்படாமல் போன தாமதத்திற்கான சாத்தியமான காரணங்களில் ஒன்று இன்னும் Back End வேலை நடந்து கொண்டு இருக்கிறது. அதாவது வருமான வரி பக்கத்தின் Back End வேலை நடந்து கொண்டு இருக்கிறது. புதிய regime படிவ மாற்றங்கள், பழைய regime மாற்றங்கள் ஆகிய மாற்றங்களை ஏற்கும் விதமாக வருமான வரி இ-ஃபைலிங் போர்டலில் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
செல்வமகள் சேமிப்பு திட்டம்
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தற்போது உள்ள வட்டி விகிதம் மே மாதத்திலும் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் தற்போது 8.2 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. 21 ஆண்டுகள் இந்த திட்டத்தின் கீழ் சேமிக்க முடியும். இந்த வட்டி இப்போதைக்கு குறைக்கப்படாது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்களின் சேமிப்பிற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்கள் உயர் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒரு சேமிப்பு திட்டம்தான் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகும். பெண்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து குறைந்த சேமிப்பு ஆனால் நிறைய வருமானம் வரும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தில் நிறைய லாபம் வட்டி மூலம் கிடைப்பதால் பெற்றோர்கள் பலரும் இதை விரும்புகின்றனர். இதனால் அதிக அளவில் இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர்
10 வயதுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் பெயரில் திட்டத்தை தொடங்கலாம். பெண் குழந்தைகள் வயது 10ஐ கடந்ததும் அவர்கள் பெயருக்கு திட்டத்தை மாற்றிக்கொள்ள முடியும். 15 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் டெபாசிட் செய்ய முடியும். 21 ஆண்டுகளுக்கு பின் டெபாசிட்டை பெற்றுக்கொள்ள முடியும்.
ஏடிஎம்
மே 1 முதல் அமலுக்கு வரும் வகையில், ஏடிஎம் பரிமாற்றக் கட்டணங்களை உயர்த்துவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒப்புதல் அளித்துள்ளது. ஏடிஎம் பரிமாற்றக் கட்டணம் என்பது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் சேவைகளை வழங்குவதற்காக ஒரு வங்கி மற்றொரு வங்கிக்கு செலுத்தும் கட்டணமாகும். மாதாந்திர இலவச வரம்பை மீறும் பரிவர்த்தனைகளுக்கு, வங்கிகள் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.23 வரை வசூலிக்கலாம், இது நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தும். இதுவரை 21 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் இனி 23 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வங்கிகள் ஏற்கனவே தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வட்டி விகிதம் மாற்றம்
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (பிபி) குறைப்பதாக அறிவித்து உள்ளது. அதாவது 6 சதவீதமாக குறைத்து உள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்துபல முன்னணி பொதுத்துறை வங்கிகள், அவற்றின் ரெப்போ உடன் இணைக்கப்பட்ட பெஞ்ச்மார்க் கடன் விகிதங்களை (RBLR) அதற்கேற்ப மாற்றி அமைத்துள்ளன. இந்த வட்டி விகித மாற்றங்கள் ஏப்ரலில் செய்யப்பட்டாலும் மே மாதம் வசூலிக்கப்படும் இஎம்ஐயில் அமலுக்கு வரும்.
இந்த மாற்றம் மூலம் வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் ரெப்போ உடன் இணைக்கப்பட்ட கடன்கள் குறைக்கப்பட்டு உள்ளன. பல்வேறு வங்கிகளில் குறைக்கப்பட்ட வீட்டு கடன் மாற்றங்களை இங்கே பார்க்கலாம்.
SBI முந்தைய வட்டி விகிதம் 9.15%, புதிய வட்டி விகிதம் 8.80%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,609, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹976
HDFC வங்கியின் முந்தைய வட்டி விகிதம் 9.25%, புதிய வட்டி விகிதம் 8.90%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,816, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹945
ஐசிஐசிஐ வங்கி முந்தைய வட்டி விகிதம் 9.20%, புதிய வட்டி விகிதம் 8.85%, ₹50 லட்சத்துக்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,712, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹958
பாங்க் ஆஃப் பரோடா முந்தைய வட்டி விகிதம் 9.10% , புதிய வட்டி விகிதம் 8.75%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,506, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹983
Axis Bank முந்தைய வட்டி விகிதம் 9.30% , புதிய வட்டி விகிதம் 8.95%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,919, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹933
பஞ்சாப் நேஷனல் வங்கியின் முந்தைய வட்டி விகிதம் 9.20%, புதிய வட்டி விகிதம் 8.90%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,816, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹945
Kotak Mahindra வங்கியின் முந்தைய வட்டி விகிதம் 9.35%, புதிய வட்டி விகிதம் 9.00%, ₹50 லட்சத்துக்கான EMI (20 ஆண்டுகள்) ₹46,022, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹910
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா முந்தைய வட்டி விகிதம் 9.10%, புதிய வட்டி விகிதம் 8.75%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,506, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹983












Click it and Unblock the Notifications