“கச்சத்தீவை விட்டுக் கொடுத்தது சரிதான்.. சும்மாவா கொடுத்தோம்?” அழுத்திச் சொன்ன செல்வப்பெருந்தகை
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது சரிதான், காங்கிரஸ் ஒருபோதும் அதை தவறு என சொல்லாது" என்று கூறியுள்ளார். கச்சத்தீவு மீட்பை வலியுறுத்தி இன்று தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்த நிலையிலும் செல்வப்பெருந்தகை இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கொடுக்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 2) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது அவர்களுடைய படகுகள் சிறை பிடிக்கப்படுவதும், தமிழக மீனவர்கள் தாக்குலுக்கு உள்ளாவதும் மீனவர்களின் துயரம் தொடர்கதையாக உள்ளது.

இலங்கை கடற்படையால் இன்னல்களுக்கு ஆளாகி வரும் தமிழக மீனவர்களின் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும் எனவும், இந்தியா இலங்கை இடையேயான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது. இலங்கையில் எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது" என்று பேசினார்.
மேலும், "தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களைப் போக்கிடவும், கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும். இதனைக் கருத்தில் கொண்டு, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் இந்திய பிரதமர் அவர்கள் அந்நாட்டு அரசுடன் பேசி, இலங்கை சிறையில் வாடும் நம் நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டு வரவேண்டுமென்று இப்பேரவை வலியுறுத்துகிறது என்ற தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்." என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
கச்சத்தீவு மீட்பை வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்த தனித் தீர்மானத்துக்கு பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்தார். அதே நேரத்தில், கச்சத்தீவு மீட்பை வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விவாதங்களை எழுப்பினார். இருப்பினும் இந்த தீர்மானத்துக்கு அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.
அதே போல, திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், கச்சத்தீவு மீட்பை வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தனர். ஒருமனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது சரிதான்; காங்கிரஸ் ஒருபோதும் அதை தவறு என சொல்லாது" என்று கூறியுள்ளார்.
கச்சத்தீவு மீட்பு தீர்மானம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "கச்சத்தீவு விவகாரத்தில் திமுக அரசு கொண்டுவந்த தனித்தீர்மானத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. அதேநேரத்தில் சில உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது சரிதான்; காங்கிரஸ் ஒருபோதும் அதை தவறு என சொல்லாது.
வெறும் 282 ஏக்கர் நீர் இல்லாத வானம் பார்த்த பூமியைக் கொடுத்துவிட்டு பல லட்சம் ஏக்கர் நிலத்தை இந்தியாவிற்கு பெற்று கொடுத்தவர் இந்திரா காந்தி. இப்போது மீனவர்கள் தங்களது உரிமை என சொல்கிறார்கள். அதற்காக அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை ஆதரிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications