திமுக கூட்டணி இல்லையென்றால் அடுத்து என்ன? நொடியும் யோசிக்காமல் செல்வப்பெருந்தகை கொடுத்த பதில்
சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணி கணக்குகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே இன்று பிரஸ் மீட்டில் செல்வப்பெருந்தகையிடம் திமுகவுடன் கூட்டணி இல்லை என்றால் காங்கிரஸின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று வந்த கேள்விக்கு நொடியும் யோசிக்காமல் செல்வப்பெருந்தகை முக்கியமான பதிலை அளித்தார்.
தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டணி தொடர்பாக இரு கட்சியிலும் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூறும் கருத்துகள் சர்ச்சையாகி வருகிறது. அதேநேரம் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது என்பதே இரு தரப்பு தலைமையும் அளிக்கும் பதிலாக இருக்கிறது.

செல்வப்பெருந்தகை
இதற்கிடையே தேசியத் தலைமையுடன் ஆலோசனைக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை டெல்லி செல்கிறார். அதற்கு முன்பு ஏர்போர்ட்டில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, "கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. டெல்லி செல்கிறேன், சென்று திரும்பியவுடன் கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன். கூட்டணியில் இழுபறி எல்லாம் இல்லை. பேசிக்கொண்டு இருக்கிறோம். எனவே, இழுபறி என்ற வார்த்தையே வேண்டாம்.
எடப்பாடி பழனிசாமி திமுக குறித்து அல்லது காங்கிரஸ் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அவர் முதலில் தனது கட்சியை விட்டுவிடாமல் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளட்டும். ஏனென்றால் பாஜக என்பது ஆக்டோபஸ் மாதிரி! எல்லாக் கட்சியும் விழுங்கி இருக்கு. இப்போது அடுத்து அதிமுகவை விழுங்கத் தயாராக இருக்கிறது. அதிமுகாவை முக்கால்வாசி விழுங்கிவிட்டது.. இன்னும் கொஞ்சம் நஞ்சம் இருக்கு. அதை விட்டுவிடாமல் அவர் பத்திரமாகத் தனது கட்சியைக் காப்பாற்றிவிட்டால் அதுவே பெரிய விஷயம்.
கூட்டணிக் கட்சிகள்
என்டிஏ கூட்டணி தலைவர்கள் மட்டுமே ஒரே மேடையில் ஏறியுள்ளனர் என சொல்வதே தவறு.. நேற்று முன்தினம் கூட கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு விழாவில் அனைத்து இந்தியா கூட்டணி தலைவர்களும் கைகோர்த்து எனவே, ஒரே மேடையில் ஏறாமல் இருக்கிறோம் என்பது தவறு. மேலும், வரும் 12ஆம் தேதி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தவுள்ளோம். அதிலும் அனைவரும் சேர்ந்தே போராடுகிறோம். மத்திய பாஜக அரசுக்கு எதிராகப் போராடுகிறோம். நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம். மக்கள் பிரச்சனைக்காக மத்திய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடுகிறோம்" என்றார்.
பாமக மற்றும் விசிக கூட்டணி
பாமக மற்றும் விசிக கூட்டணி தொடர்பாகக் கூறியிருந்த கருத்து சர்ச்சையானது தொடர்பான கேள்விக்கு அவர், "நான் அதுபோல எதுவும் சொல்லவில்லை. பாமக விசிக கூட்டணி குறித்து கேள்வி வந்தபோது முதல்வர் அது குறித்து முடிவெடுப்பார் என்றும் காங்கிரஸ் மற்ற கட்சிகளின் பிரச்சனையில் மூக்கை நுழைக்காது என்று ரொம்ப தெளிவா சொன்னேன்.. அதைச் சிலர் தவறாகத் திரித்துப் போட்டுவிட்டார்கள். இது குறித்து விசிக எம்எல்ஏ பாலாஜியிடமும் பேசினேன்.
எந்த இடத்திலும் கூட்டணி தொடர்பாகவோ அல்லது கூட்டணிக் கட்சி தொடர்பாகவோ பேசவில்லை. கூட்டணி விவகாரத்தில் தமிழ்நாட்டில் கூட்டணிக்குத் தலைவராக இருக்கும் முதல்வர் முடிவெடுப்பார் என்பதே எங்கள் நிலைப்பாடு" என்றார்.
நாடாளுமன்றம்
டெல்லி நாடாளுமன்றத்தில் அமளி தொடரும் நிலையில், அது தொடர்பான கேள்விக்கு அவர், "ஜனநாயகம் என்பதே நாடாளுமன்றத்தில் இருந்து தான் பிறக்கிறது. நாடாளுமன்றத்தில் தான் சட்டம் உருவாகிறது. எனவே, அந்த நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறுவதற்கு அனுமதிக்க வேண்டும். அவரது கருத்தைச் சொல்ல அனுமதிக்க வேண்டும். பேச அனுமதிக்க மாட்டோம் என்பது ஜனநாயகம் இல்லை. சர்வாதிகாரம். சர்வாதிகாரமான முறையில் நாடாளுமன்றத்தை பாஜக நடத்துகிறது. இதனால் தான் சபாநாயகர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்" எனப் பதிலளித்தார்.
திமுகவுடன் கூட்டணி
திமுகவுடன் கூட்டணி இல்லை என்றால் காங்கிரஸின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், சட்டென நொடியும் யோசிக்காத செல்வப்பெருந்தகை, "கூட்டணி குறித்து முடிவெடுக்க அகில இந்தியக் காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரத்தைக் கொடுத்துவிட்டோம். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுப்பார்கள். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்" என்று பதிலளித்தார்.
-
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு!











Click it and Unblock the Notifications