அதிமுக பெரியாரை ஏத்துக்கலையா! சீமான் விஷயத்தில் மௌனம் ஏன்? - செல்வப்பெருந்தகை கேள்வி
சென்னை: தந்தை பெரியார் குறித்து சீமான் பேசியிருந்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவுக்கு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, “அதிமுக பெரியாரை ஏற்றுக் கொள்ளவில்லையா. இந்த விவகாரத்தில் அதிமுக Soft-ஆக இருப்பது ஏன்? இந்த விஷயத்தை ஏன் கண்டிக்கவில்லை? புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த கட்சியை ஆரம்பிக்கும் போது தந்தை பெரியார் தங்களுடைய தலைவர் என்று ஏற்றுக் கொண்டவர். அண்ணா திமுக என்று கட்சியின் பெயரை வைத்திருக்கிறார்கள் அண்ணாவுடைய குருவே பெரியார் தான்.

அப்படி இருக்கும்போது பெரியாரை விமர்சிக்கும் போது அதிமுக என் அமைதி காக்கிறது? நாங்க எல்லாம் கூட கண்டித்திருக்கிறோம். பாஜக இதை கண்டிக்காது ஏனெனில் பாஜகவினுடைய செயல் திட்டங்களை சீமான் நடைமுறைப்படுத்துகிறார். சீமான் பாஜகவில் ஊதுகோலாக இருக்கிறார் அவர்களால் பேச முடியாததை சீமானை வைத்து பேச வைக்கிறார்கள். அதற்காக அதிமுக ஏன் மௌனமாக இருக்க வேண்டும்? ஃப்ரீயா இருந்த தேசத்தின் சொத்து.
இந்த விஷயத்தை அதிமுகவும் பாஜகவும் புறக்கணித்திருப்பது இரண்டு கட்சிகளின் எதிர்கால சட்டமன்ற தேர்தல் திட்டமா என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் ஒவ்வொரு கட்சிக்கும் முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
பிரச்சனை என்ன?:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், கட்சியை தொடங்கிய காலத்தில் தன்னுடைய முப்பாட்டன் பெரியார் என்று கூறியிருந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, பெரியார் குறித்த விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்தார். இதன் உச்சமாக சமீபத்தில் பெரியார் குறித்து அவர் பேசியிருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. சமூக மாற்றத்திற்கு பெரியார் என்ன செய்தார்? என்று கேள்வி எழுப்பிய அவர், பெரியார் கூறியதாக மேலும் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
போராட்டம்:
பெரியார் குறித்த சீமானின் கருத்துகளுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனையடுத்து பெரியார் இயக்கங்கள் சீமானுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியிருந்தன. ஆனால் அதிமுக இந்த விவகாரத்தில் போதுமான அளவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என்று அரசியல் கட்சிகள் விமர்சித்திருந்தன. அதன் தொடர்ச்சியாக செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications