காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான்
சென்னை: ''தேர்தல் முடிவுக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன். இதுபற்றி ராகுல் காந்தியிடம் தெரிவித்து விட்டேன். தேர்தல் முடிவுக்கு பிறகு ஸ்ரீ பெரும்புதூர் தொகுதி மக்களுக்கு மட்டும் தான் வேலை செய்வேன்'' என செல்வபெருந்தகை இன்று திடீரென்று அறிவித்துள்ளார். செல்வபெருந்தகை கடந்த 2 ஆண்டுகளாக தமிழக காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வந்த நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டை ஒப்பிடும்போது 3 தொகுதிகள் அதிகமாகும். இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கடும் இழுபறி நீடித்தது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து மீட்டிங் நடத்தினர்.
இறுதியாக இன்று பிற்பகலில் மதுரை மாவட்டம் மேலூர் சட்டசபை தொகுதியை தவிர்த்து பிற 27 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி காங்கிரஸ் மாநில தலைவராக இருக்கும் செல்வபெருந்தகை மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தற்போது இந்த தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள நிலையில் மீண்டும் களம் காண்கிறார்.
மனநிறைவோடு விலகுகிறேன்
இந்நிலையில் தான் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென்று செல்வபெருந்தகை அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் மாங்காட்டில் இன்று செல்வபெருந்தகை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ''ஒவ்வொரு மனிதனும் ஒரு பதவியில் இருந்து விலகும்போது மனநிறைவோடு செல்ல வேண்டும். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு நான் மனநிறைவோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.
எந்த அழுத்தமும் இல்லை
எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. நான் எந்த பதவி கேட்டாலும் ராகுல் காந்தி கொடுப்பார். கடந்த 5 ஆண்டுகளாக பார்த்தால் நான் கட்சிக்காக எந்த பணிகளை செய்தேன் என்பது தெரியும். முழுக்க முழுக்க ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்காக 24 மணிநேரமும் செலவிட தயாராகிவிட்டேன். மாநில தலைவராக பதவி வகித்த கடந்த 2 ஆண்டுகளில் திட்டங்களை தீட்ட முடிந்தது. ஆனால் உறவுகளை வைத்து கொள்வதில் சில சிரமங்கள் இருந்து வந்தது.
ராகுலிடம் சொல்லிவிட்டேன்
ஸ்ரீபெரும்புதூர் மக்களின் பிள்ளையாக இருந்த நான் கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பிள்ளையாக இருந்தேன். தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டின் பிள்ளையாக வேறு யாராவது வேலை செய்வார். நான் ஸ்ரீபெரும்புதூர் பிள்ளையாக மாறுவேன். இதுபற்றி ராகுல் காந்தியிடம் தெரிவித்துவிட்டேன் '' என்றார்.
என்ன காரணம்?
செல்வபெருந்தகை பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் இல்லை. புரட்சி பாரதம், புதிய தமிழகம், விசிக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளில் செயல்பட்ட பிறகு தான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதனால் காலம் காலமாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வரும் தலைவர்களுக்கும், செல்வபெருந்தகைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன.
குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வபெருந்தகை மாநில தலைவரான பிறகு இந்த மோதல்கள் அதிகரிக்க தொடங்கின. ஜோதிமணி உள்பட பல காங்கிரஸ் தலைவர்கள் செல்வபெருந்தகை செயல்பாட்டில் அதிருப்தியானார். இந்த அதிருப்தியை அவ்வப்போது சமூக வலைதள பதிவுகளில் காண்பித்து வந்தனர்.
தற்போது சட்டசபை தேர்தல் வேட்பாளர் பட்டியலிலும் கூட கட்சிக்கு உழைத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு, புதிதாக வந்தவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளதாக பாரம்பரிய காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அதோடு பணம் வாங்கி கொண்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன்மூலம் செல்வபெருந்தகை நேரடியாக குறிவைக்கப்பட்டார். இந்நிலையில் தான் தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக செல்வபெருந்தகை அறிவித்துள்ளார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications