ஸ்டாலின் பின்னாடியே கொடைக்கானல் போன செல்வப்பெருந்தகை! விஜயை பற்றி கேட்டதும் வந்துச்சு பாருங்க கோபம்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: ஓவர் நைட்ல மனநிலை மாறி மக்கள் முடிவெடுக்க மாட்டாங்க.. எதுவுமே செய்யாம நான் முதலமைச்சர்னு அமைச்சரவை பட்டியல் போடுறதெல்லாம் ஏமாற்றுத்தனம் என விஜயை மிகக் கடுமையாக விமர்சித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, முதலமைச்சர் ஸ்டாலின் சக்தியை மீறி உழைச்சிருக்காரு.. உலகத்தில் இல்லாத நல்ல திட்டங்களை எல்லாம் கொண்டு வந்து இருக்காரு.. திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் கொடைக்கானலை நோக்கி அரசியல் தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே குடும்பத்துடன் வந்துள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையும் கொடைக்கானல் வந்துள்ளார்.

Tamil Nadu Assembly Election 2026 Selvaperunthagai Vijay

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்," தமிழக முதல்வர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கான தேர்தல் இது. முதலமைச்சர் ஐந்து ஆண்டுகள் உழைத்த உழைப்பு மற்றும் தீட்டிய திட்டத்திற்கு பரிசாக மக்கள் தீர்ப்பை எழுதியுள்ளனர்.

இந்த தீர்ப்பு நான்காம் தேதி வாசிக்கப்படும். கனவில் வேண்டுமானால் அமைச்சரவை பட்டியலை தவெக தயாரித்துக் கொள்ளலாம். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானெல்லாம் தமிழகத்தை ஆள வேண்டும் என்று நினைக்கக் கூடாது. குறைந்தபட்சமாக திமுக கூட்டணி 40 சதவீத வாக்குகளை கடந்து வெற்றி பெறும்.

எம்ஜிஆர், என்.டி.ஆர் உள்ளிட்ட நடிகர்கள் மக்களுக்காக பல உதவிகளை செய்து பின்னர் அரசியலுக்கு வந்தவர்கள் அவர்களுடன் விஜய்யை ஒப்பிட முடியாது. சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஒன்றிய அரசு முழுமையாக வாக்குகளை சேகரிக்க விடவில்லை.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களிடம் ஈடி வருமான வரித் துறை உள்ளிட்ட ஒன்றிய அரசின் கீழ் பணியாற்றக்கூடிய துறைகள் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தனர். தன்னுடைய தொகுதியில் நடைபெற்ற ஐடி ரைட் குறித்து விரைவில் அனைத்து வீடியோ ஆதாரங்களும் வெளியிடப்படும். வெளியிட்ட பிறகு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.

என்டிஏ கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்கள் இதில் எத்தனை பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது என்பதை வெள்ளை அறிக்கையாக ஒன்றிய அரசு கொடுத்தால் ஒன்றிய அரசு யாருக்கு சாதகமாக செயல்படுகிறது என்று தெரியும்" என மத்திய அரசையும் நடிகர் விஜய்யையும் கடமையாக தாக்கினார் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+