Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளம்பு, கிளம்பு.. பஞ்சாயத்து ஓவர்.. கூட்டம் போடாத! திருமா-ஸ்டாலின் எஃபெக்ட்.. செல்வப்பெருந்தகை குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முதலமைச்சரை சந்தித்து பேசியுள்ளார். அவ்வளவுதான் எல்லாம் சரியாகப் போய்விட்டது. இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து பயணித்து வருகிறது. இந்நிலையில், காந்தி ஜெயந்தி நாளில் அக்டோபர் 2 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

mk stalin thirumavalavan tamil nadu politics selvaperunthagai

விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது திமுக கூட்டணியில் உள்ள நிலையில் இந்த மாநாடு நடத்தும் விவகாரம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதற்கிடையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுத்தார். திமுக கூட்டணியில் இருந்தபடியே திருமாவளவன் அழைப்பு விடுத்தது சர்ச்சைக்குள்ளானது.

அதைத்தொடர்ந்து, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது. அந்த வீடியோவை அட்மின் பதிவிட்டு நீக்கியதாக திருமாவளவன் தெரிவித்தார். அதன்பிறகு நீக்கப்பட்ட வீடியோ தொடர்பான முழு பேச்சையும் திருமாவளவன் மீண்டும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

இதைத்தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து வந்த முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்துப் பேசினார். செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறுகையில், தேர்தலுக்காக, தேர்தல் அரசியலுக்காக நாங்கள் மாநாடு நடத்தவில்லை. பல தாய்மார்களின் பிரச்சினைக்காக நாங்கள் இந்த மாநாட்டை நடத்துகிறோம். கூட்டணி கணக்கு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளரிடம் கூறியுள்ளதாவது: மது விலக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை. மகாத்மா காந்தியினுடைய கொள்கையும் மதுவிலக்கு என்பதுதான். அவர் பிறந்த இந்த மண்ணில் இதுவரை மது விலக்கு இல்லை. அதனைப் படிப்படியாக குறைத்தாலும், ஒழித்தாலும் அதனை காங்கிரஸ் ஆதரிக்கும். இந்த விஷயத்தை அறிவியல் பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் அணுக வேண்டும். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எதனையும் செய்துவிடக் கூடாது.

தமிழ்நாட்டினுடைய தட்ப வெப்ப நிலை, பொதுமக்களின் மனநிலை போன்றவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து முடிவெடுப்பார் என்று நம்புகிறோம். பேசுவது அரசியல்தான். இந்த விஷயத்துக்காக இந்தியா கூட்டணிக்குள் எந்தவித சலசலப்பும் இல்லை. இந்தியா கூட்டணி என்பது அரசியல் கூட்டணி மட்டுமல்ல. அதற்கு அப்பாற்பட்டு தேச ஒற்றுமை, மண்ணைக் காப்பாற்றுவது, அரசியலமைச் சட்டத்தைக் காப்பது என்று நிறைய விஷயங்கள் இதில் உள்ளன.

அரசியல் கணக்கு மட்டுமல்லாமல், இந்த மண்ணைக் காப்பதில் இந்தியா கூட்டணி உறுதியாக உள்ளது. இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. அமெரிக்காவில் இருந்து முதலமைச்சர் தமிழகத்துக்கு வந்துள்ளார். எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் அவரை சந்தித்து வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூட முதலமைச்சரை சந்தித்து வந்துள்ளார். அவ்வளவுதான் எல்லாம் சரியாப் போச்சு.. இதற்குப் பிறகு என்ன நடக்கப் போகிறது. எல்லாம் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது.

பாஜகவின் வழிகாட்டுதல் குழுத் தலைவராக உள்ள எச்.ராஜா தொடர்ந்து வன்மமாகப் பேசுவார் என்பது தமிழக மக்கள் அறிந்த உண்மை. ஆனால், எங்கள் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்காவில் பேசிய பேச்சையெல்லாம் இட்டுக்கட்டி, தேசத் துரோகி என்று அவதூறு பேசி வருவதை காங்கிரஸ் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற செயலை அவர் கைவிட வேண்டும்.

யார் தேசத் துரோகி, யார் தேசத்திற்கு எதிராக செயல்பட்டார்கள், எந்தெந்த தலைவர்கள் எல்லாம் பிரிட்டிஸ்காரர்களிடம் அடிமை சாசனத்தை எழுதிக் கொடுத்து விடுதலைப் போராட்டத்தில் இருந்து விலகுகிறோம் என்று எழுதிக் கொடுத்தார்கள் என்பதை எல்லாம் எச்.ராஜா சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு தான் பேச வேண்டும்.

இனிவரும் காலங்களில் ராகுல் காந்தி பற்றியோ, காங்கிரஸ் பேரியக்கம் பற்றியோ ஆதாரங்கள் இல்லாமல் கொச்சைப் படுத்தினால் அவர் தமிழகத்தில் எங்கு சென்றாலும் முற்றுகைப் போராட்டத்தை தமிழக காங்கிரஸ் முன்னெடுக்கும். இது இறுதி எச்சரிக்கை என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+