செங்கோட்டை டூ தாம்பரம்.. குட்நியூஸ் வந்தாச்சு.. அலுங்காம குலுங்காம போலாம்.. ரயில்வே நிர்வாகம் சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தாம்பரம் - செங்கோட்டை ரயில் குறித்த முக்கிய அறிவிப்பினை, ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

சென்னை தாம்பரத்தில் இருந்து, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமைகளில், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் காரைக்குடி, அருப்புக்கோட்டை, நெல்லை, அம்பை வழியாக, செங்கோட்டைக்கு அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 20683) ஏப்ரல் 8ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.

Sengottai Tambaram Train Super News and Extra Sleeper Coach in Tambaram Sengottai express for Passengers

கட்டணம்: இந்த ரயிலில், தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு ரிசர்வேஷன் கட்டணமாக 240 ரூபாயும், ஸ்லீப்பர் வசதி கொண்ட பெட்டியில் 435 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோல, 3 அடுக்கு AC கோச்சில் 1060 ரூபாயும், 2 அடுக்கு AC கோச்சில் 1620 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது...

இந்த ரயிலில் மொத்தம் 17 ரயில் பெட்டிகள் உள்ள நிலையில், அவைகளில் 3 அன்ரிசர்வேஷன் அதாவது முன்பதிவில்லா பெட்டியும், 2 இரண்டடுக்கு AC பெட்டியும், 5 மூன்றடுக்கு AC பெட்டியும், 5 தூங்கும் வசதியுள்ள பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளன.

ஸ்லீப்பர் கோச்சுகள்: பெரும்பாலான ரயில்களில் ஸ்லீப்பர் கோச்கள் அதிகமாகவும், AC கோச்சுகள் குறைந்த அளவிலேயே இருக்கும். ஆனால் இந்த ரயிலில் மட்டும், ஸ்லீப்பர் கோச்சுகள் மிக குறைவாகவே உள்ளதால், கூடுதலாக ஸ்லீப்பர் கோச்சுகள் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. முக்கியமாக, இதுகுறித்து தென் மாவட்ட பயணிகள் சங்கம் இந்த கோரிக்கையை ரயில்வேயிடம் தொடர்ந்து வலியுறுத்தியபடியே வந்தது..

தென்காசி ரயில்: "செங்கோட்டை- தாம்பரம் எக்ஸ்பிரசில் ஏசி கோச்சுகள் அதிகம் என்பதால் பல பயணிகள் அதில் பயணிக்க தயங்குகின்றனர். தென்காசி வழியாக இயக்கப்படும் பொதிகை மற்றும் சிலம்பு எக்ஸ்பிரஸ்களே பயணிகளின் முதல் தேர்வாக உள்ளது. அதனால், செங்கோட்டை- தாம்பரம் வாரம் மும்முறை ரயிலில் ஏசி கோச்சுகளை குறைத்துவிட்டு, கூடுதலாக இரண்டு அல்லது மூன்று ஸ்லீப்பர் கோச்களை இணைக்க வேண்டும் என ரயில்வேயை வலியுறுத்தி வருகிறோம்.

அதேபோல, இந்த ரயிலானது, தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டால், மறுநாள் காலை 11 மணிக்குதான் செங்கோட்டை வந்து சேர்கிறது. அந்தவகையில் செங்கோட்டை- தாம்பரம் எக்ஸ்பிரசில் பயண நேரம் அதிகமாக உள்ளது. எனவே, காலை 10 மணிக்குள் செங்கோட்டைக்கு இந்த ரயில் வந்து அடையுமாறு கால அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தபடியே வந்தனர்.

பெரு மகிழ்ச்சி: இந்நிலையில், இந்த கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி, இந்த ரயிலில் உள்ள இரண்டடுக்கு AC பெட்டியில் ஒன்றை குறைத்துவிட்டு, அதற்கு பதிலாக கூடுதலாக ஒரு ஸ்லீப்பர் கோச் (S-6) பெட்டியினை இணைத்துள்ளது... இதனால், பயணிகள் கூடுதலாக பயணிக்க முடியும் என்பதால், பெருத்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

முன்னதாக, இந்த ரயிலுக்கு "தாமிரபரணி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்" என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் சங்கம் தரப்பில் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+