10 பெரிய தலைகளுக்கு போனை போட்ட செங்கோட்டையன்.. அதிமுக கூடாரமே காலி.. தவெகவிற்கு அடித்த ஜாக்பாட்
சென்னை: அதிமுகவில் உள்ள 10 முக்கியமான தலைகளிடம் செங்கோட்டையன் பேசி வருகிறாராம். மாஜி அமைச்சர்கள், சில மூத்த எம்எல்ஏக்கள், எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் தலைகள் பலரிடமும் செங்கோட்டையன் தீவிரமாக பேசி வருகிறாராம்.
அதிமுகவில் இருந்து கடந்த சில நாட்களாகவே பலர் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். சமீபத்தில் முன்னாள் அதிமுக எம்.பி. மைத்ரேயன், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவின் முடிவு பல விவாதங்களை எழுப்பியது. அதிமுகவின் முக்கியமான இஸ்லாமிய முகங்களில் ஒருவரான அன்வர் ராஜா, திமுகவில் இணைந்தது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இவர் அதிமுகவின் அமைப்புச் செயலாளராகவும், முன்னாள் எம்.பி.யாகவும் இருந்தார்.
அதேபோல் ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த நிலையில், எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மனோஜ் பாண்டியன் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துவிட்டார்.
லிஸ்ட் கூடிக்கொண்டே போகிறது
இப்படி வரிசையாக அதிமுகவில் இருந்து வெளியேறும் தலைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. எங்கடா இங்க இருந்த என் டீமை காணோம் என்று ரியாஸ் கானிடம் மாட்டிக்கொண்ட வடிவேல் தனது அடியாட்களை தேடுவது போல எடப்பாடி பழனிசாமி திரும்பி பார்க்கும் முன் கட்சியில் இருந்து கொத்து கொத்தாக ஆட்கள் வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள்.
அந்த வகையில்தான் அதிமுகவில் இருந்த செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவர் தவெகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் செங்கோட்டையன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இன்னும் நிறைய பேர் சேர்வார்கள்
அதிமுக தரப்பில் விசாரித்ததில் இது வெறும் டீசர்தான் என்கிறார்கள். மெயின் பிக்சர் இனிதான் என்கிறார்கள். அதிமுகவில் உள்ள 10 முக்கியமான தலைகளிடம் செங்கோட்டையன் பேசி வருகிறாராம். மாஜி அமைச்சர்கள், சில மூத்த எம்எல்ஏக்கள், எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் தலைகள் பலரிடமும் செங்கோட்டையன் தீவிரமாக பேசி வருகிறாராம்.
அதாவது கொங்கு மண்டலத்தில் இருந்து இன்னொரு தலைவர், சென்னையில் இருந்து ஒருவர், டெல்டாவில் இருந்து இருவர் என்று இன்னும் 10 தலைகள் விரைவில் தவெகவிற்கு தாவ போகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே வைத்திலிங்கம், மாபா பாண்டியராஜன் தவெகவில் இணையலாம் என்று செய்திகள் வந்தன. இப்படிப்பட்ட நிலையில்தான் செங்கோட்டையன் 10 பேரிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.
சிட்டி டிஸ்மாண்டில் என்று ரஜினி சொன்னதும் ரோபோ சிட்டி உடல் பாகங்களை அகற்றுவது போல.. அதிமுகவின் பாகங்களை செங்கோட்டையன் ஒவ்வொன்றாக அகற்றி தவெகவிற்கு கொண்டு வரப்போகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அடுத்த சில நாட்களில் இதனால் சுடசுட.. பல அரசியல் திருப்பங்கள் நடக்கலாம் எனப்படுகிறது. தமிழ்நாட்டில் இப்போது நடப்பதோ மழைக்காலம்.. ஆனால் அதிமுகவிற்கு மட்டும் அது இலையுதிர் காலம். அதாவது இரட்டை இலையில் இருந்து பல இலைகள் உதிர்ந்து விழுந்து வேறு கட்சிக்கு பறந்து செல்லும்.. இலையுதிர் காலம் இது என்கிறார்கள் ரத்தம் கொதிக்க நிற்கும் ரத்தத்தின் ரத்தங்கள்!
-
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு.. ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? வெளியான ஷாக் தகவல்! -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! "அம்மா, அப்பா, மனைவி என்னிடம் கடன் வாங்கியுள்ளனர்" வேட்புமனுவில் தகவல் -
ரூ.500+ கோடிக்கு சொத்து இருக்கு.. ஆனாலும் ரூ.67,000க்கு TVS XL வாங்கிய விஜய்.. என்ன காரணம் தெரியுமா -
இது ஆகுறது இல்ல.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு புகார் கொடுப்பதே வேலையாகிப்போச்சு விஜய்க்கு -
அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள்.. விஜயிடம் கடனாளிகள் ஆனது எப்படி? உண்மையான காரணம் என்ன? -
"அன்புதானே எல்லாம்" ராமதாஸுக்கே அறிவுரை கூறிய பெரம்பூர் பாமக வேட்பாளர்! யார் இந்த திலகபாமா? -
சென்னையில் விஜய் பிரசாரம் திடீர் ரத்து.. வில்லிவாக்கம் செல்லாமல் வீடு திரும்புகிறார் -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
என் மகிழ்ச்சி இதுதான்! இறுதியாக ஒரே ஊரில் சேர்ந்து விட்டோம்! திரிஷாவின் பீலிங் ஆன போஸ்ட்! இதுதான் பதிலடியா?












Click it and Unblock the Notifications