Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாறியது செங்கோட்டையன் அலுவலக பேனர்.. விஜய் உடன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டோ.. காரிலும் தவெக கொடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் அலுவலத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, தவெக தலைவர் விஜய் படங்களுடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. தனது காரிலும் கொடியை மாற்றி உள்ளார் செங்கோட்டையன்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜய்யின் முன்னிலையில் நேற்று அக்கட்சியில் இணைந்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை நவ. 26 ஆம் தேதி அவர் ராஜினாமா செய்த நிலையில், நேற்று தவெகவில் இணைந்துள்ளார்.

sengottaiyan tvk vijay

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல் எழுப்பிய செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பறித்திருந்தார். அதைத்தொடர்ந்து, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்ததன் காரணமாக அதிமுகவிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று தவெக கட்சி அலுவலகத்துக்கு சென்ற செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

அப்போது, தவெக தலைவர் விஜய், செங்கோட்டையனுக்கு தவெகவின் சால்வை அணிவித்து வரவேற்றார். விஜய் தவெகவின் கட்சித் துண்டை செங்கோட்டையனின் கழுத்தில் அணிவித்தார். பிறகு விஜய் தவெகவின் உறுப்பினர் அட்டையை செங்கோட்டையனிடம் வழங்க, அதைப் பெற்றுக் கொண்டு தனது சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டார்.

கட்சியில் இணைந்த செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் முன்னாள் எம்.பி சத்தியபாமா உள்ளிட்ட பலரும் ஒருவர் பின் ஒருவராக மேடை ஏறி விஜயிடம் வாழ்த்துப் பெற்றனர். அவர்களுக்கு சால்வை மற்றும் தவெக கட்சித் துண்டை அணிவித்து, கட்சியில் வரவேற்றார் விஜய்.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செங்கோட்டையன், "அதிமுகவில் எம்ஜிஆரால் நான் அடையாளம் காட்டப்பட்டவன். 1972ல் இந்த இயக்கம் தொடங்கிய போது தலைவருக்கு பின்னால், அணிவகுத்து நின்ற தொண்டர்களில் நானும் ஒருவன். 1975ல் கோவையில் பொதுக்குழு நடந்த போது, முழுப்பொறுப்பும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பணியை தலைவர் பாராட்டும் வகையில் முடித்தேன். இதற்கு என்னை எம்ஜிஆர் பாராட்டினார்.

அப்போது எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் இந்த கட்சி 100 நாட்கள் கூட நடக்காது. 100 நாட்கள் படம் போல் மறைந்து விடும் என்று சொன்னார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி நடத்தினோம். அதன் பிறகு பல்வேறு கால சூழ்நிலை காரணமாக இயக்கம் 3 கூறுகளாக பிரிந்தது. அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் நாங்கள் எல்லோரும் வலியுறுத்தினோம். ஆனால் அந்த கருத்துக்களை செயல்படுத்த இயலவில்லை.

50 ஆண்டு கால வரலாற்றில் இந்த இயக்கதிற்காக ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த எனக்கு, கிடைத்த பரிசு தான் உறுப்பினர் பதவி கூட இல்லாத நிலை. ஏன் இங்கே இணைந்தார் என்று பலரும் கேட்கக்கூடும். காரணம் இருக்கிறது. இன்றைக்கு திமுக, அதிமுக என்பது வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றாக இணைந்து தான் பயணம் செய்கின்றனர் என்பது நாடு அறிந்த ஒன்றாக இருக்கிறது.

துாய்மையான ஆட்சியை நடத்துவதற்கு ஒருவர் தேவை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. மாபெரும் இயக்கத்தை உருவாக்கி மக்கள் மனதில் விஜய் இடம்பெற்று இருக்கிறார். பள்ளிக்கு செல்லும் குழந்தையிடம் கேட்டால் கூட சொல்லும் அப்பா, அம்மா இந்த முறை விஜய்க்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லும். ஒரு மாற்றம் தமிழகத்தில் வேண்டும்.

தமிழகத்தில் ஒரு புதிய மாற்றம் உருவாக்கப்பட வேண்டும். புனித ஆட்சியை நடத்துவதற்கு ஒருவர் தேவை என்ற எண்ணம் மக்கள் மனிதில் நிறைந்து இருக்கிறது. எல்லா நாடுகளிலும், மாநிலங்களிலும் மாற்றம் நிகழ்கிறது. டெல்லியிலும், பஞ்சாபிலும் மாற்றம் ஏற்பட்டது. அதே மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். 2026 என்பது மக்களால் வரவேற்கப்படுகிற, மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிற, புனித ஆட்சி உருவாகும் வகையில் விஜய் வெற்றி பெறுவார். மாபெரும் புரட்சி உருவாகி வெற்றி என்ற இலக்கை எட்டுவார்." எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் அலுவலத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, தவெக தலைவர் விஜய் படங்களுடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. தவெகவில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் ஆகிய பதவிகளையும் தனது பெயருடன் சேர்த்துப் போட்டுள்ளார் செங்கோட்டையன்.

மேலும், செங்கோட்டையன் என்ற பெயரும், தவெக கொடி வண்ணத்தில் எழுதப்பட்டிள்ளது. மேலும் தனது காரிலும் கட்சிக் கொடியை மாற்றி உள்ளார் செங்கோட்டையன். எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவில் செயல்பட்டு வந்த செங்கோட்டையன், அரை நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு கட்சி மாறி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+