அவாய்ட் செய்யப்பட்ட செங்கோட்டையன்! அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பெயர் பட்டியலால் சலசலப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் செங்கோட்டையனின் பெயர் இடம்பெறவில்லை.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே உரசல்கள் இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது பெயர் பட்டியலில் அவருடைய பெயர் இல்லாதது விவாதங்களை கிளப்பியுள்ளது.

AIADMK Sengottaiyan

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுவிழா எடுக்கப்பட்டிருந்தது. இதில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. திட்டம் தொடங்கியதற்கு முக்கிய காரணமே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான். அவருடைய படம் பாராட்டு விழா பேனரில் இல்லை. எனவேதான் பங்கேற்கவில்லை என்று சமாளித்திருந்தார். அதன் பின்னர் அவரது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதற்கும் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்திருந்தார்.

அதிர்ந்து பேசாத சாஃப்ட் டைப் தலைவரான இவரே, பாராட்டு விழாவில் பங்கேற்காமல் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது விவாதமாகியிருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பெயர் பட்டியலில் செங்கோட்டையனின் பெயர் இல்லை.

மாவட்ட பொறுப்பாளர்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், "பூத் கமிட்டி அமைப்பது, கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில், விளையாட்டு வீரர்களை அதிக அளவில் சேர்ப்பது முதலான பணிகளை மேற்பார்வையிட்டு செய்து முடிப்பதற்காக, மாவட்டம் வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்!

2026-ல் நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி, சட்டமன்றத் தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது; கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் அனைத்தும் உரியவர்களிடம் வழங்கப்பட்டுவிட்டனவா என்பதை கண்காணிப்பது மற்றும் கழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில், ஊராட்சி, நகர வார்டு, பேரூராட்சி வார்டு, மாநகராட்சி வட்ட அளவில், விளையாட்டு வீரர்களை அதிக அளவில் உறுப்பினர்களாகச் சேர்ப்பது முதலான பணிகளை, மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் இணைந்து விரைவாக முடிப்பதற்காக, கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

திருவள்ளூர் வடக்கு - C. பொன்னையன், P. வினோத்குமார்
திருப்பத்தூர் - டாக்டர் மு. தம்பிதுரை, S. விக்னேஷ்
திருச்சி புறநகர் தெற்கு - செ. செம்மலை
மதுரை மாநகர் - வளர்மதி, ஆணிமுத்த
திருச்சி மாநகர் - கோகுல இந்திரா, அறிவொளி
கரூர் - சின்னசாமி
நெல்லை மாநகர் - கருப்பசாமி பாண்டியன், சிவசாமி, சிவஆனந்தன்
சென்னை புறநகர் - பி.வேணுகோபால், டி.பிரசாத்
ராணிப்பேட்டை மேற்கு - சேவூர் ராமச்சந்திரன்
பெரம்பலூர் - ப.மோகன்
காஞ்சிபுரம் - வைகைச்செல்வன்
ஈரோடு புறநகர் மேற்கு - A.K.செல்வராஜ்,
நீலகிரி - செ.ம. வேலுசாமி
கோவை புறநகர் தெற்கு - V.S.சேதுராமன்
கடலூர் மேற்கு - ஆர்.கமலக்கண்ணன், C. கிருபாகரன்
கடலூர் தெற்கு - டாக்டர் K. கோபால், சிவா. ராஜமாணிக்கம்
தஞ்சை தெற்கு - S. வளர்மதி
ராமநாதபுரம் - சுதா கே. பரமசிவன், M.S.R இராஜவர்மன்
தஞ்சை மேற்கு - N.R.சிவபதி
திருவள்ளூர் கிழக்கு - T.K.M.சின்னையா
வேலூர் மாநகர் - முக்கூர் N. சுப்பிரமணியன்
வேலூர் புறநகர் - செஞ்சி ந. ராமச்சந்திரன், சதிஷ் சங்கர்
விருதுநகர் கிழக்கு - G.பாஸ்கான், S. மைக்கேல் ராயப்பன்
தென்காசி தெற்கு - அ. அன்வர்ராஜா, D. கௌரிசங்கர்
செங்கல்பட்டு மேற்கு - சி.த. செல்லப்பாண்டியன், நாவலூர் முத்து
திருப்பூர் மாநகர் - செ. தாமோதரன்,
தஞ்சாவூர் மத்தியம் - T. ரத்தினவேல்
ஈரோடு மாநகர்- M.S.M. ஆனந்தன்
வட சென்னை தெற்கு (கிழக்கு)- K.T. பச்சைமால், டாக்டர் K. காமராஜ்
தென் சென்னை தெற்கு (மேற்கு)- N. முருகுமாறன், M. மோகன்
கன்னியாகுமரி மேற்கு- என். சின்னத்துரை
திருப்பூர் புறநகர் மேற்கு- K.R. அர்ஜூனன்
ஈரோடு புறநகர் கிழக்கு - திருப்பூர் C. சிவசாமி
திருப்பூர் புறநகர் கிழக்கு - V. மருதராஜ்
தூத்துக்குடி தெற்கு- P.G.ராஜேந்திரன்,கல்லூர் E. வேலாயுதம்
ராணிப்பேட்டை கிழக்கு - திருத்தணி கோ.அரி,
திருவண்ணாமலை கிழக்கு- வாலாஜாபாத் பா. கணேசன்
திண்டுக்கல் மேற்கு - S. ஆசைமணி, A.S.K. சரவணக்குமார்
சிவகங்கை - A.K. சீனிவாசன்
சேலம் மாநகர் - K. சிங்காரம்
திருவண்ணாமலை மத்தியம் - வரகூர் அ. அருணாசலம்
கள்ளக்குறிச்சி- கா. சங்கரதாஸ்
தஞ்சாவூர் கிழக்கு - R.மனோகரன்
திருவண்ணாமலை வடக்கு - V.ராமு
திருவள்ளூர் மத்தியம் - ராயபுரம் மனோ
திருவண்ணாமலை தெற்கு - துரை. செந்தில்
மதுரை புறநகர் கிழக்கு - R. காந்தி
அரியலூர் - மகேந்திரன்
சேலம் புறநகர் - திருவேற்காடு பா. சீனிவாசன், பொன். ராஜா, ஜனனீ P.சதிஷ்குமார்
திருவள்ளூர் தெற்கு - I.S. இன்பதுரை,
கடலூர் வடக்கு- S. அப்துல் ரஹிம்
வட சென்னை தெற்கு (மேற்கு) - சிங்கை G. ராமச்சந்திரன்
தருமபுரி- மாஃபா. பாண்டியராஜன்
தென் சென்னை தெற்கு (கிழக்கு) - V. சரோஜா, V.L. அருண்
கடலூர் கிழக்கு - K.A. ஜெயபால்

மேற்கண்ட பொறுப்பாளர்கள் அனைவரும். உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று, மேற்குறிப்பிட்டுள்ள அனைத்துப் பணிகளையும் விரைவாக முடித்து, அதன் விபரங்களை 31.3.2025-க்குள் தலைமைக் கழகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+